மகாராணியாரின் இறுதிச்சடங்குக்கு சென்ற இடத்தில் கனேடிய பிரதமர் செய்த செயலால் சர்ச்சை
மகாராணியாரின் இறுதிச்சடங்குக்குச் சென்றிருந்த கனேடிய பிரதமர், பாட்டு பாடிக்கொண்டிருப்பதைக் காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோ சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
கனடாவின் சார்பில் பிரித்தானிய மகாராணியாரின் இறுதிச்சடங்குக்குச் சென்றிருந்த கனேடிய பிரதமர் செய்த ஒரு செயல் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
பிரித்தானிய மகாராணியாரின் இறுதிச்சடங்குக்குச் சென்றிருந்த கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, தான் தங்கியிருந்த ஹொட்டலில் வேறு சிலருடன் இணைந்து பாட்டு பாடுவதைக் காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, இறுதிச்சடங்குக்குச் சென்ற இடத்தில் பிரதமர் செய்தது மரியாதைக் குறைவான செயல் என விமர்சனம் எழுந்துள்ளது.
பிரித்தானியாவில் இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்குக்கு முந்தைய தினம் இரவு, அப்போதைய பிரித்தானிய பிரதமரான போரிஸ் ஜான்சன் பார்ட்டி நடத்தியதை நினைவுகூர்ந்துள்ளார்கள் சிலர்.
ஆனால், வேறு சிலரோ, ட்ரூடோ அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி எதிலும் அப்படி செய்யவில்லை, ஹொட்டலில் தங்கியிருக்கும்போது சும்மா இருக்கும்போதுதான் அப்படி செய்திருக்கிறார். அதில் தவறில்லை என்கிறார்கள்.
NDP கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Charlie Angusஓ, ஒருபடி மேலே போய், எனக்கு ட்ரூடோ பாட்டுப் பாடியதிலெல்லாம் பிரச்சினை ஒன்றுமில்லை, என்ன, வேறு ஒரு நல்ல பாட்டைப் பாடியிருக்கலாம் என்கிறார்!