ஹலோ ஜெலென்ஸ்கி! நாங்க ஜஸ்டினும், ரிஷி சுனக்கும் பேசுறோம்..கனேடிய பிரதமரின் வீடியோ
ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு போன் செய்து பேசுவது போன்ற வீடியோவை கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிர்ந்துள்ளார்.
உக்ரைனுக்கு ட்ரூடோவின் ஆதரவு
இந்தோனேஷியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதியைத் தவிர்த்து மற்ற உலக நாடுகளின் முக்கிய தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியிடம் ''நாங்கள் உக்ரைன் மக்களுக்காக உறுதியாக துணை நிற்கிறோம்'' எனக் கூறினார்.
உக்ரேனிய வீரர்களுக்கான பயிற்சி
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரூடோ, 'பிரித்தானியாவில் ரஷ்யாவுக்கு எதிராக போராடும் உக்ரேனிய வீரர்களுக்கான எங்களின் பயிற்சிப் பணியை, கனடா அடுத்த ஆண்டு இறுதிவரை நீட்டிக்கிறது' கூறினார்.
இதுதொடர்பான வீடியோ ஒன்றை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ரிஷி சுனக்குடன் அமர்ந்திருக்கும் ட்ரூடோ, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை செல்போனில் அழைத்து ''ஹலோ வோலோடிமிர்..ரிஷி மற்றும் ஜஸ்டின் பேசுகிறோம்'' என்கிறார்.
From the @G20org today: @RishiSunak and I spoke with @ZelenskyyUa as we stand firm with the people of Ukraine. We also announced Canada is extending our training mission of Ukrainian soldiers in the UK until the end of next year. pic.twitter.com/xfuSZMPNqO
— Justin Trudeau (@JustinTrudeau) November 16, 2022
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
@Leon Neal/AP/REX/Shutterstock