அந்த செய்தியை கேட்டு இதயம் நொறுங்கிவிட்டது - கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
கனடாவில் காட்டுத்தீயை அணைக்கும் பணியின்போது உயிரிழந்த விமானிக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
தீயை அணைக்கும் முயற்சியில் விமானி பலி
கனடாவின் மேற்கு மாகாணமான ஆல்பர்ட்டாவில் காட்டுத்தீயை அணைக்க போராடிய ஹெலிகாப்டர் விமானி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.
குறித்த விமானியின் பெயர் எட்மன்டன் (41) என்றும், Altaவின் Whitecourtயைச் சேர்ந்த அவர் விபத்தில் ஏற்பட்ட காயங்களால் இறந்ததாக RCMP உறுதிப்படுத்தியுள்ளது.
THE CANADIAN PRESS/HO-Government of Alberta
ட்ரூடோ இரங்கல்
இந்த நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், 'காட்டுத் தீயை எதிர்த்துப் போராடி வரும் மற்றொரு கனேடியன் உயிர் இழந்ததைக் கேட்டு நான் மனம் உடைந்தேன்.
நேற்று ஆல்பர்ட்டாவில் ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதில் பலியான துணிச்சலான விமானியின் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கல்கள். அவர் தனது மாகாணத்திற்கும், நமது நாட்டிற்கும் செய்த சேவையை நாம் என்றும் மறக்க மாட்டோம்' என தெரிவித்துள்ளார்.
I’m heartbroken to hear that another Canadian fighting wildfires has lost their life – my condolences to the family and friends of the brave pilot whose helicopter crashed in Alberta yesterday. We’ll never forget his service to his province and to our country.
— Justin Trudeau (@JustinTrudeau) July 20, 2023
File Photo
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |