கனடாவில் இதுதான் முதல் முறை! ட்ரூடோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கனடாவில் 2025ஆம் ஆண்டு மகளிர் கால்பந்து தொடர் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
36 ஆண்டுகளுக்கு பின் உலககோப்பை
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் கனடா குரூப் Stage-யில் தோல்வியுற்றதால் வெளியேறியது.
ஆனால், கனடா கால்பந்து ரசிகர்கள் 36 ஆண்டுகளுக்கு பிறகு தங்கள் அணி உலகக்கோப்பையில் விளையாடியதை கொண்டாடினர்.
ஆடவர் கால்பந்து அணிக்கு பெருமளவு ஆதரவு இருக்கும் நிலையில், கனடாவின் மகளிர் கால்பந்து அணியை ஊக்குவிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
@Dan Himbrechts/AAP PHOTO
உள்நாட்டு மகளிர் கால்பந்து தொடர்
அதாவது, 2025ஆம் ஆண்டில் மகளிர் தொழில்முறை கால்பந்து தொடர் கனடாவுக்கு வர உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'இது அதிகாரப்பூர்வமானது: பெண்கள் தொழில்முறை கால்பந்து தொடர் 2025யில் கனடாவுக்கு வருகிறது! இதை உண்மையாக்க ஈடுபட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள் - ஆடுகளத்தில் வீரர்கள் மற்றும் அணிகளைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம்' என தெரிவித்துள்ளார்.
It’s official: A women’s professional soccer league is coming to Canada in 2025! Congratulations to everyone involved in making this a reality – we’re looking forward to seeing the players and teams on the pitch.
— Justin Trudeau (@JustinTrudeau) December 7, 2022