உக்ரைன் மீதான தாக்குதல், வடகொரியாவின் அணு ஆயுத திட்டம்..ஜப்பான் பிரதமருடன் விவாதித்த ட்ரூடோ
ஜப்பான் பிரதமர் கிஷிடாவுடன் உலகளாவிய பிரச்சனைகள், மூலோபாய கூட்டாண்மை குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விவாதித்தார்.
ஜப்பான் பிரதமரின் வருகை
கனடாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் ஃபியூமியோ கிஷிடாவை வரவேற்ற ஜஸ்டின் ட்ரூடோ அவருடன் பலதரப்பட்ட விவாதங்களை மேற்கொண்டார்.
இருநாட்டு தலைவர்களும் கனடா - ஜப்பானின் மூலோபாய கூட்டாண்மை மற்றும் சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான தங்கள் பகிரப்பட்ட உறுதிப்பாட்டின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயங்கள் கூறப்பட்டுள்ளது. மேலும் இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் புதுமையான அணுகல் ஆகியவற்றை வலுப்படுத்துவது, நடுத்தர வர்க்க வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் பொருளாதார பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்தும் தலைவர்கள் விவாதித்தனர்.
Le premier ministre @Kishida230 et moi partageons de nombreux objectifs, notamment la création de bons emplois, des économies fortes et une région indopacifique libre et ouverte. Cet après-midi, on a parlé de ces objectifs et des moyens de continuer à s’en rapprocher ensemble. pic.twitter.com/zTEPgTfoFl
— Justin Trudeau (@JustinTrudeau) January 12, 2023
உக்ரைன் குறித்து விவாதம்
அத்துடன் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ ஆக்கிரமிப்பின் பரந்த உலகளாவிய தாக்கங்கள், குறிப்பாக உலகளாவிய பற்றாக்குறை, உணவு எரிபொருள் மற்றும் உரங்களின் விலை உயர்வு குறித்தும் தலைவர்கள் தங்கள் கவலைகளை பகிர்ந்துகொண்டனர்.
வடகொரியாவின் அணு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களின் அச்சுறுத்தல் குறித்து விவாதித்தனர்.
@Reuters
வடகொரியாவுக்கு எதிரான உறுதிப்பாடு
அதேபோல் வடகொரியாவின் அணு ஆயுதங்களை முழுமையாக, சரிபார்க்கப்பட்ட மற்றும் மீள முடியாத வகையில் அகற்றுவதற்கான தங்கள் ஆதரவை மீண்டும் வலியுறுத்தினர்.
அந்நாட்டிற்கு எதிரான ஐக்கிய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை கண்காணிக்க உதவும் பன்னாட்டு முயற்சிக்கான தங்கள் உறுதிப்பாட்டையும் பிரதமர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
இதற்கிடையில், கனடாவின் இந்தோ-பசிபிக் வியூகத்தின் ஒரு வர்த்தகப் பணியை மேற்கொள்ளும் கனடாவின் திட்டம் அறிவிக்கப்பட்டது.
@THE CANADIAN PRESS/Sean Kilpatrick
இந்த நிலையில் கிஷிடாவை சந்தித்தது குறித்து ட்ரூடோ தனது பதிவில், 'பிரதமர் கிஷிடாவுடன் பல இலக்குகள் குறித்து நான் பகிர்ந்துகொண்டேன். நல்ல வேலைகளை உருவாக்குவது, வலுவான பொருளாதாரம், சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்குதல் குறித்தும். இன்று மதிய அமர்வில், குறித்த இலக்குகளில் கவனம் செலுத்தி, அவற்றை எவ்வாறு ஒன்றாக செயல்படுத்தலாம் என்பதைப் பற்றியும் பேசினோம்' என தெரிவித்துள்ளார்.
@Sean Kilpatrick/The Canadian Press