டொனால்டு ட்ரம்பின் மிரட்டல்... வேறு வழியின்றி புளோரிடாவுக்கு விரைந்த ஜஸ்டின் ட்ரூடோ
கனடா உட்பட மூன்று நாடுகள் மீது கடுமையன வரி விதிக்கப்படும் என டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், தற்போது அவரை தனியாக சந்திக்கும் பொருட்டு ஜஸ்டின் ட்ரூடோ புளோரிடாவுக்கு விரைந்துள்ளார்.
ட்ரம்பை நேரிடையாக சந்திக்க
புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள ட்ரம்பின் Mar-a-Lago விடுதியில் சந்திப்பு நடக்கும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஜனதிபதியாக பொறுப்புக்கு வந்த சில மணி நேரங்களில் கனடா மீது இறக்குமதி வரி விதிக்க இருப்பதாக டொனல்டு ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்த நிலையிலேயே ட்ரம்பை நேரிடையாக சந்திக்க ஜஸ்டின் ட்ரூடோ புளோரிடா விரைந்துள்ளார். ஆனால், ட்ரூடோ மற்றும் ட்ரம்பின் அலுவலகங்கள் இந்த சந்திப்பு தொடர்பில் தகவல் ஏதும் வெளியிடவில்லை.
இருப்பினும், ட்ரூடோ தற்போது புளோரிடாவில் உள்ளார், வெள்ளிக்கிழமை இரவு ட்ரம்புடன் உணவருந்துவார் என்றும் தகவல் கசிந்துள்ளது.
முன்னதாக கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் போதைப்பொருட்களை, குறிப்பாக ஃபெண்டானில் மற்றும் எல்லையை கடக்கும் புலம்பெயர்ந்தோரை கட்டுப்படுத்தும் வரை இரு நாடுகள் மீதும் 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்று திங்கட்கிழமை டொனால்டு ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்தார்.
இந்த நிலையில், மெக்ஸிகோ, கனடா மற்றும் சீனாவின் அதிகாரிகளும், முதன்மையான தொழில் நிறுவனங்களும் ட்ரம்பின் இந்த முடிவால் சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளின் பொருளாதாரங்களும் பாதிக்கப்படும்,
10 கனேடிய மாகாணங்களின்
பணவீக்கத்தை அதிகரிக்கும் மற்றும் வேலை வாய்ப்பை சீர்குலைக்கும் என்று எச்சரித்துள்ளனர். ஏற்கனவே மக்களிடையே செல்வாக்கு சரிந்து காணப்படும் நிலையில், ட்ரம்பால் கனேடிய பொருளாதாரம் பாதிக்கப்படும் என்றால் ட்ரூடோவின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகும் நிலை உருவானது.
மட்டுமின்றி, அக்டோபர் 2025 இன் பிற்பகுதியில் நடத்தப்பட வேண்டிய தேர்தலில் ட்ரூடோவின் லிபரல் கட்சி எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியிடம் தோல்வியடைவார்கள் என்று கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.
ஆனல் ட்ரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தலுக்கு எதிராக ஒன்றுபட்டு போராட வேண்டும் என ட்ரூடோ இந்த வாரம் உறுதியளித்தார். அத்துடன் இந்த விவகாரம் தொடர்பில் விவாதிக்க, மொத்தமுள்ள 10 கனேடிய மாகாணங்களின் முதல்வர்களுடன் ஒரு கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையிலேயே திடீரென்று தற்போது ஜஸ்டின் ட்ரூடோ புளோரிடாவுக்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரம்பின் இந்த அச்சுறுத்தலால் 2 மில்லியன் கனேடிய வேலை வாய்ப்புகள் நெருக்கடிக்கு உள்ளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |