ரஷ்யா உடனடியாக உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டும் - கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
உக்ரைன் மீதான பாதுகாப்பு கவுன்சில் விவாதத்தில், ரஷ்யா தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என முடிவெடுக்கப்பட்டதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு உதவி
ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டு வரும் உக்ரைனுக்கு உதவ கனடா புதிய தொகுப்பாக 200 கோடி வழங்கி இருப்பதாக செய்தி வெளியானது.
அத்துடன் உக்ரைனுக்கு தேவையான நிதியுதவி, ஆயுத உதவி மற்றும் உட்கட்டமைப்பிற்கு தேவையான உதவிகளை வழங்க பிரித்தானியா தலைமையில் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
இதில் கனடா, அமெரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.
Twitter (@JustinTrudeau)
ரஷ்யா வெளியேற வேண்டும்
இந்த நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள பதிவில், 'உக்ரைன் மீதான இன்றைய பாதுகாப்பு கவுன்சில் விவாதத்தில் எனது செய்தி: உக்ரேனிய அமைதி சூத்திரத்தின் முக்கிய கொள்கைகளை கனடா ஆதரிக்கிறது - மேலும் ரஷ்யா உடனடியாக, முழுமையாக, நிபந்தனையின்றி உக்ரைனில் இருந்து தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று கோருகிறது' என தெரிவித்துள்ளார்.
மேலும் சிலி நாட்டு ஜனாதிபதியை நேரில் சந்தித்து உரையாடியதற்கு பேசியதற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அவரது பதிவில், காட்டுத்தீக்கு பதிலளிக்கும் விதமாக சிலி கனடாவுக்கு வழங்கிய ஆதரவிற்கு நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன். மேலும் காலநிலை மாற்றம், பொருளாதார வளர்ச்சி, உக்ரைனுக்கான ஆதரவு மற்றும் பிற உலகளாவிய பிரச்சனைகள் குறித்து நாங்கள் பேசினோம் என கூறியுள்ளார்.
Twitter (@JustinTrudeau)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |