கனடா, சுவிட்சர்லாந்து மக்களுக்காக..ஜனாதிபதி இக்னேசியோவை சந்தித்த ட்ரூடோ
சுவிட்சர்லாந்து ஜனாதிபதி இக்னேசியோவை சந்தித்தது குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார்.
துனிசியா சந்திப்பு
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு இடையில் கடன் நிவாரணம், இடம்பெயர்வு, எரிசக்தி உள்ளிட்டவை குறித்து விவாதிக்க துனிசிய தீவில் பல நாடுகளின் தலைவர்கள் ஒன்று கூடினர்.
இதில் கலந்து கொண்ட கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சுவிட்சர்லாந்து ஜனாதிபதி இக்னேசியோ கேஸ்சிஸ் இருவரும் விவாதித்தனர். அதனைத் தொடர்ந்து ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட பதிவில்,
'இன்று இக்னேசியோ கேஸ்சிஸ் என்னுடன் சிறிது நேரம் செலவிட்டார். உக்ரைனை ஆதரிப்பதாக இருந்தாலும், காலநிலை நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்வதாக இருந்தாலும், முதலீட்டை ஊக்குவித்து வேலைகளை உருவாக்கினாலும், நாங்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம். மேலும், கனடா மற்றும் சுவிட்சர்லாந்து மக்களுக்கான நல்ல முடிவுகளை தொடர்ந்து வழங்குவோம்' என தெரிவித்துள்ளார்.
Spent some time with @IgnazioCassis today. Whether it’s supporting Ukraine, advancing climate action, or promoting investment and creating jobs, we’ll continue to work together – and we’ll keep delivering results for the people of Canada and Switzerland. pic.twitter.com/VmNeCtdh0R
— Justin Trudeau (@JustinTrudeau) November 19, 2022
ஜஸ்டின் ட்ரூடோவுடன், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் மற்றும் எட்டு ஆப்பிரிக்க நாடுகளின் ஜனாதிபதிகள் என 88 உறுப்பினர்களைக் கொண்ட Francophonie-யின் சர்வதேச அமைப்பின் 18வது வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.