கொடூரமான சோகம்! கனடாவில் சிறுவர்கள் உயிரை பறித்த சம்பவம்..விரைந்த ஜஸ்டின் ட்ரூடோ
கனடாவில் சாரதி ஏற்படுத்திய விபத்து தொடர்பில் நகர மேயரை பிரதமர் ட்ரூடோ சந்தித்தார்.
கோர சம்பவம்
கியூபெக் மாகாணத்தின் Laval நகரில் சாரதி ஒருவர் இயக்கிய வாகனம் மோதியதில் இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் சிலர் காயமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் பேருந்தை இயக்கி சாரதி Pierre Ny St-Amand (51) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
@Ryan Remiorz/The Canadian Press/AP
முன்னதாக துயர சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது ட்விட்டர் பதிவில், 'பெற்றோர்கள், குழந்தைகள் மற்றும் தொழிலாளர்கள் அனுபவிக்கும் வலி மற்றும் பயத்தை எந்த வார்த்தையையும் கொண்டு அகற்ற முடியாது. ஆனால் நாங்கள் உங்களுக்காக இருக்கிறோம். இந்த அசாத்தியமான, துயரமான நிகழ்வால் பாதிக்கப்பட்ட அனைவரையும் என் எண்ணங்களில் வைத்திருக்கிறேன். எனது இதயம் இன்று லாவல் மக்களுடன் உள்ளது' என கூறியிருந்தார்.
@THE CANADIAN PRESS/Ryan Remiorz
மேயருடன் சந்திப்பு
இந்த நிலையில், கோர விபத்து தொடர்பாக நகர மேயர் ஸ்டெப்பானே போயரை பிரதமர் ட்ரூடோ சந்தித்துள்ளார். அதன் பின்னர் அவருடன் பேசியது குறித்து பதிவிட்டுள்ளார்.
அதில், நான் இன்று மாலை மேயர் ஸ்டெப்பானே போயரை அணுகினேன். லாவல் மக்களுக்கு எங்களால் இயன்ற வகையில் உதவ எங்கள் அரசாங்கம் உள்ளது என்பதை அவருக்கு தெரியப்படுத்தினேன். இன்றைய கொடூரமான சோகத்தால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எங்கள் இதயங்கள் உள்ளன. நாங்கள் உங்கள் அனைவரையும் நினைத்துக் கொண்டிருக்கிறோம் என கூறியுள்ளார்.
I reached out to Mayor @StphanBoyer this evening, and I let him know that our government is here to help the people of Laval in any way we can. Our hearts are with everyone affected by today’s horrific tragedy. We’re thinking of you all.
— Justin Trudeau (@JustinTrudeau) February 9, 2023