ஆசியான் மாநாட்டில் உலகத் தலைவர்களை சந்தித்த கனேடிய பிரதமர்: எடுத்த முக்கிய முடிவுகள் என்ன?
ஆசியான் உச்சி மாநாட்டில் வியட்நாம், கம்போடியா பிரதமர்களை சந்தித்து பேசிய ஜஸ்டின் ட்ரூடோ
உலகெங்கிலும் கண்ணிவெடிகளை அகற்றும் முயற்சிகள் குறித்து கம்போடியா பிரதமருடன் பேசினேன் - ஜஸ்டின் ட்ரூடோ
கம்போடியாவில் தொடங்கியுள்ள ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கம்போடியா மற்றும் வியட்நாம் தலைவர்களுடன் உரையாடினார்.
ஆசிய நாடான கம்போடியாவில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் உச்சி மாநாடு நடந்து வருகிறது. உலகத் தலைவர்கள் பலர் இதில் கலந்துகொண்டுள்ளனர். அவர்களுடன் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் இணைந்து கொண்டார்.
கம்போடியாவின் பிரதமர் ஹன் சென்னிடம் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, மாநாட்டினை ஏற்பாடு செய்ததற்கு நன்றி தெரிவித்தார். அத்துடன் அவருடன் உரையாடிய ட்ரூடோ, கம்போடியா மட்டுமன்றி உலகெங்கிலும் கண்ணிவெடிகளை அகற்றும் முயற்சிகள் குறித்தும், இந்தோ-பசிபிக் பகுதியில் தனது சகாக்களுடன் இணைந்து கனடா பணியாற்றுவது குறித்தும் பேசினார்.
அதனைத் தொடர்ந்து வியட்நாம் பிரதமர் மின்ஹ் சின்ஹை சந்தித்த ட்ரூடோ, கனடா-வியட்நாம் கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான வழிகள், இரு நாடுகளிலும் நல்ல வேலை வாய்ப்புகளை உருவாக்குவது உள்ளிட்டவை குறித்தும் விவாதித்துள்ளார்.
After arriving in Cambodia today, I sat down with Prime Minister Hun Sen – and thanked him for hosting this year’s @ASEAN Summit. We discussed de-mining efforts in Cambodia and around the world, and Canada’s commitment to working with our Indo-Pacific partners. pic.twitter.com/18jfl26KRJ
— Justin Trudeau (@JustinTrudeau) November 12, 2022
மேலும், கனடா மற்றும் ஆசியான் உறுப்பு நாடுகளின் மக்களுக்கு முக்கியமான பிரச்சனைகளை இருவரும் தொடர்ந்து முன்னெடுக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த சந்திப்புகள் குறித்து ஜஸ்டின் ட்ரூடோ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
During our meeting today, Prime Minister Pham Minh Chính and I focused on how we can strengthen the Canada-Vietnam partnership – including by creating good jobs in both countries. We’ll keep making progress on the issues that matter to people in Canada and ASEAN member states. pic.twitter.com/q0d83XvXZo
— Justin Trudeau (@JustinTrudeau) November 12, 2022