ஜோ பைடன் சிறந்த மனிதர்.,கனேடியர்களுக்கு ஒரு பங்குதாரர் - ஜஸ்டின் ட்ரூடோ புகழாரம்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒரு சிறந்த மனிதர் என ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார்.
பரபரப்பான சூழல்
முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்க அரசியலில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
தேர்தல் தொடர்பில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வந்த ஜோ பைடன் (Joe Biden), திடீரென ஜனநாயக கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து பைடன் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸை முன்மொழிந்தார்.
ட்ரூடோ புகழாரம்
இந்த நிலையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தனது எக்ஸ் தள பக்கத்தில் ஜோ பைடனை புகழ்ந்து பேசியுள்ளார்.
அவர் தனது பதிவியில், ''நான் ஜனாதிபதி பைடனை பல ஆண்டுகளாக அறிவேன். அவர் ஒரு சிறந்த மனிதர். அவர் செய்யும் அனைத்தும் அவரது தேசத்தின் மீதான அன்பால் வழிநடத்தப்படுகிறது.
ஜனாதிபதியாக அவர் கனேடியர்களுக்கு ஒரு பங்குதாரர் மற்றும் ஒரு உண்மையான நண்பர். ஜனாதிபதி பைடன் மற்றும் முதல் பெண்மணிக்கு நன்றி'' என தெரிவித்துள்ளார்.
I’ve known President Biden for years. He’s a great man, and everything he does is guided by his love for his country. As President, he is a partner to Canadians — and a true friend.
— Justin Trudeau (@JustinTrudeau) July 21, 2024
To President Biden and the First Lady: thank you. pic.twitter.com/5mQvFn8INn
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |