ஜப்பானை உலுக்கிய பேரழிவு..நிலநடுக்கத்தில் 4 பேர் பலியானதாக தகவல் - ஜஸ்டின் ட்ரூடோ கூறிய வார்த்தை
ஜப்பானில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தால் 4 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுனாமி எச்சரிக்கை
புத்தாண்டு தினமான நேற்று ஜப்பானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பூமி குலுங்கியது.
90 நிமிட இடைவெளிக்குள் 20க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து ஜப்பான் அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்தது.
அத்துடன் மாகாண கடற்பகுதிகளில் 5 மீற்றர் உயரம் வரை சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
AFP
பயங்கர நிலநடுக்கங்கள் மற்றும் சுனாமி அலைகளால் 2 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.
ட்ரூடோ ஆதரவுக்கரம்
இந்த நிலையில் நிலநடுக்கம் காரணமாக இன்று அதிகாலை வரை 4 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், ஜப்பானுக்கு உதவிக்கரம் நீட்ட தயாராக இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், 'பேரழிவுகரமான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பான் மக்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. எங்கள் பார்ட்னர் மற்றும் நட்பு நாடான ஜப்பான்: கனடா உங்களுடன் நிற்கிறது, உதவிக்கரம் நீட்ட தயாராக உள்ளது' என தெரிவித்துள்ளார்.
My thoughts are with the people of Japan following the devastating earthquake. To Japan, our partner and friend: Canada is standing with you, ready to extend a helping hand.
— Justin Trudeau (@JustinTrudeau) January 2, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |