கனேடிய வீரர்களின் தியாகத்தை இது கௌரவிக்கிறது: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனேடிய வீரர்களின் வீரம் மற்றும் தியாகத்தை கப்யோங் நினைவுச்சாலை கௌரவிப்பதாக கூறியுள்ளார்.
ட்ரூடோவின் தென்கொரிய பயணம்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தென் கொரிய நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அந்நாட்டு ஜனாதிபதி யூன் சுக் யோலை அவர் சந்தித்து பேசினார்.
அப்போது கனிமங்கள் மீதான ஒத்துழைப்பை மேம்படுத்துவும், வடகொரியாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களை தடுக்க கூட்டு முயற்சிகளை தொடரவும் இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
REUTERS/Kim Hong-Ji/Pool
ஜஸ்டின் ட்ரூடோவின் பதிவு
இந்த நிலையில் ட்ரூடோ வெளியிட்டுள்ள பதிவில், 'கப்யோங் போரில் கனேடிய வீரர்களின் வீரம் மற்றும் தியாகத்தை கப்யோங் நினைவுச் சாலை கௌரவிக்கிறது.
முன்னதாக, இந்த துருப்புகளின் அடிச்சுவடுகளில் நடக்க மாணவர்களுடன் சேர்ந்தோம் - அவர்கள் இன்றைய செழிப்பான தலைநகரான சியோலுக்கான பாதையை பாதுகாக்க எண்ணிக்கையில் அதிகமாகப் போராடினர்' என தெரிவித்துள்ளார்.
The Kapyong Commemorative Trail honours the bravery and sacrifice of Canadian soldiers in the Battle of Kapyong. Earlier, we joined students to walk in the footsteps of these troops – who fought outnumbered to defend the path to today’s thriving capital, Seoul. pic.twitter.com/NFowWqqqzZ
— Justin Trudeau (@JustinTrudeau) May 18, 2023