வரலாற்றை உருவாக்குங்கள், எங்களை பெருமைப்படுத்துங்கள்! வீராங்கனை அளித்த சீருடையை அணிந்த ட்ரூடோ
ஹாக்கி போட்டியில் தோல்வியடைந்த ஒட்டாவா மகளிர் அணிக்கு ஆறுதலாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார்.
ஹாக்கி போட்டி
Boston மகளிர் அணிக்கு எதிரான ஹாக்கி போட்டியில் ஒட்டாவா அணி விளையாடியது.
இப்போட்டிக்கு முன்பாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒட்டாவா வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றினார்.
அப்போது வீராங்கனை ஒருவர் தமது அணியின் சீருடையை ட்ரூடோவுக்கு வழங்கினார். அதனை அணிந்துகொண்ட அவர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து கூறி களத்திற்கு அனுப்பினார்.
What a game, @PWHL_Ottawa! You fought hard and played tough – and like you've done at every game so far, you've shown countless other women that they belong on the ice, too. Keep making history, and keep making us proud. pic.twitter.com/yLraVZ8SLe
— Justin Trudeau (@JustinTrudeau) January 25, 2024
போட்டியின் முடிவில் ஒட்டாவா அணி 2-3 என்ற கோல் கணக்கில் Boston-யிடம் தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து வீராங்கனைகளுக்கு ஆறுதல் கூறும் வகையில் பதிவு ஒன்றை ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ளார்.
வரலாற்றை உருவாக்குங்கள்
அவரது பதிவில், 'ஒட்டவாவின் என்னவொரு அருமையான ஆட்டம்! நீங்கள் கடினமாக போராடினீர்கள், கடினமாக விளையாடினீர்கள் - இதுவரை ஒவ்வொரு ஆட்டத்திலும் நீங்கள் இதைப் போலவே முடித்தீர்கள்.
நீங்கள் எண்ணற்ற மற்ற பெண்களும் ஐஸுக்கு சொந்தமானவர்கள் என்பதை காட்டியிருக்கிறீர்கள். வரலாற்றை உருவாக்குங்கள், எங்களை பெருமைப்படுத்துங்கள்' என தெரிவித்துள்ளார். அத்துடன் போட்டி குறித்த வீடியோ காட்சிகளையும் அவர் பகிர்ந்துள்ளார்.
Associated Press
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |