உங்களை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி தோழி: ஜஸ்டின் ட்ரூடோவின் பதிவு
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரை சந்தித்தது குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார்.
நேட்டோ மாநாட்டில் ட்ரூடோ
லிதுவேனியாவில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டின் ஜனாதிபதி Gitanas Nausedaவை சந்தித்து பேசினார்.
உச்சி மாநாட்டை நடத்தியதற்காகவும், கூட்டணிக்குள் லிதுவேனியாவின் செயலில் மற்றும் ஆக்கப்பூர்வமான பங்கிற்காகவும் அவருக்கு நன்றி தெரிவித்தார்.
அதேபோல் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயெனை(Ursula von der Leyen) சந்தித்து பேசினார்.
ADRIAN WYLD /The Canadian Press
ஜஸ்டின் ட்ரூடோவின் பதிவு
இதுகுறித்து ட்ரூடோ வெளியிட்டுள்ள பதிவில், 'தலைவர் உர்சுலா வான் டெர் லேயெனும், நானும் இப்போது சில காலமாக ஒன்றாக வேலை செய்து வருகிறோம். எங்களுக்குள் பொதுவாக சில முன்னுரிமைகள் உள்ளன.
உக்ரேனியர்களை ஆதரிப்பது, ரஷ்ய ஆட்சியை பொறுப்புக்கூற வைப்பது, ஜனநாயகத்தை பாதுகாப்பது, பொருளாதாரத்தை சுத்தமாக கட்டியெழுப்புவத்து மற்றும் பல விடயங்கள் உள்ளன. இன்று உங்களை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி தோழியே' என கூறியுள்ளார்.
President @vonderLeyen and I have been working together for some time now, and we have many priorities in common – supporting Ukrainians, holding the Russian regime accountable, defending democracy, building clean economies, and more. Good to see you again today, my friend. pic.twitter.com/xizsTVOzvs
— Justin Trudeau (@JustinTrudeau) July 12, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |