கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல்..ஒவ்வொரு கனேடியனும் எதிர்த்து போராட வேண்டும் - ஜஸ்டின் ட்ரூடோ
2021ஆம் ஆண்டில் பயங்கரவாத தாக்குதல் கொல்லப்பட்டஇஸ்லாமிய குடும்பத்தை கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நினைவு கூர்ந்தார்.
அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சிறுவன்
கனடாவின் டொரோண்டோவின் தென்மேற்கே உள்ள சிறிய நகரமான லண்டனில், கடந்த 2021ஆம் ஆண்டு சாலையில் நடந்த சென்ற பாகிஸ்தானிய வம்சாவளி குடும்பத்தினர் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆளாகினர்.
அவர்கள் மீது லொறி ஒன்று மோதியதில் சல்மான் அஃப்ஸால் (46), மதிஹா (44), மகள் யும்னா (15) மற்றும் சல்மானின் தாயார் தலாத் (74) ஆகியோர் கொல்லப்பட்டனர்.
குடும்பத்தில் 9 வயது மகன் மட்டுமே அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். இச்சம்பவம் தொடர்பில் லொறி ஓட்டுநர் நதானியேல் வெல்ட்மேனுக்கு கொலை குற்றத்திற்காக 4 ஆயுள் தண்டனைகளும், சிறுவனை கொலை செய்ய முயன்றதாக மற்றொரு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
நினைவுகூர்ந்த ஜஸ்டின் ட்ரூடோ
இந்த நிலையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த துன்பியல் நிகழ்வை நினைவுகூர்ந்தார். வேதனை நிறைந்த நினைவு ஆண்டு என அவர் குறிப்பிட்டார்.
மேலும் அவரது எக்ஸ் பக்கத்தில், ''மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தலாத், சல்மான், மதிஹா மற்றும் யும்னா அஃப்ஸால் ஆகியோர் கொல்லப்பட்டனர். கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலால் 3 தலைமுறைகள் கொல்லப்பட்டு ஒரு சிறுவன் ஆதரவற்றவன் ஆனான்.
இந்த வேதனையான ஆண்டு நிறைவில் நம் லண்டன் குடும்பத்தை நினைவு கூறுகிறோம். இஸ்லாமிய எதிர்ப்பு கொல்லும் என்பதை நாம் நினைவில் கொள்கிறோம். எங்கு, எப்போது பார்த்தாலும் அதை எதிர்த்துப் போராடுவது ஒவ்வொரு கனேடியனுக்கும் உள்ளது'' என தெரிவித்துள்ளார்.
Three years ago, Talat, Salman, Madiha, and Yumnah Afzaal were murdered. Three generations killed and a young boy orphaned by a cowardly terrorist attack.
— Justin Trudeau (@JustinTrudeau) June 6, 2024
On this painful anniversary, we remember #OurLondonFamily. We remember that Islamophobia kills, and it is on every Canadian…
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |