அந்த செய்தியால் அதிர்ச்சியடைந்து கலக்கமடைந்துள்ளேன்! கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
பெல்ஜியத்தில் இருவர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டதை கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்ததாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார்.
பயங்கரவாத தாக்குதல்
ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் நடந்த சுவீடன் - பெல்ஜியம் போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் குழுமியிருந்தனர்.
சில ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் அவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.
இதில் இரண்டு ரசிகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்டு இதனை நிகழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Getty Images
ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல்
இந்த நிலையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வேதனை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
'பெல்ஜியத்தில் இருந்து வந்த செய்தியால் நான் அதிர்ச்சியடைந்து கலக்கமடைந்தேன், மேலும் யாருடைய அன்புக்குரியவர்கள் அர்த்தமற்ற முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கனேடியர்கள் நம் பெல்ஜியம் மற்றும் சுவீடிஷ் நண்பர்களுக்காக உடன் நிற்கிறோம் - மேலும் உலகெங்கிலும் உள்ள மக்களுடனும் வெறுப்பு மற்றும் வன்முறைக்கு எதிராக நிற்கிறார்கள்' என தெரிவித்துள்ளார்.
I’m shocked and disturbed by the news from Belgium, and I’m sending my condolences to those whose loved ones have been senselessly murdered. Canadians are standing with our Belgian and Swedish friends – and with people around the world against hatred and the violence it leads to.
— Justin Trudeau (@JustinTrudeau) October 17, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |