2000 உயிர்களை பலிகொண்ட துருக்கி, சிரியா பேரழிவு! ட்ரூடோ வெளியிட்ட பதிவு
துருக்கி மற்றும் சிரியாவில் நடந்த பூகம்பம் குறித்து கனேடிய ஜனாதிபதி ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார்.
பூகம்பம்
மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை 2,600 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
@Reuters
மேலும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். அவர்கள் மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
@REUTERS
இந்த நிலையில் துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவ கனடா தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ட்ரூடோவின் பதிவு
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'துருக்கி மற்றும் சிரியாவில் இருந்து வரும் அறிக்கைகள் மற்றும் படங்கள் பேரழிவை ஏற்படுத்துகின்றன. இந்த பெரிய பூகம்பங்களால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எங்கள் எண்ணங்கள் உள்ளன. மேலும், அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்காக எங்கள் இதயம் செல்கிறது. உதவி வழங்க கனடா தயாராக இருக்கிறது' என கூறியுள்ளார்.
The reports and images from Turkey and Syria are devastating. Our thoughts are with everyone affected by these major earthquakes, and our hearts go out to those who lost loved ones. Canada stands ready to provide assistance.
— Justin Trudeau (@JustinTrudeau) February 6, 2023