ஹமாஸ் பிடியில் உள்ள பணயக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் - கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
இஸ்ரேல் பிரதமருடன் பேசிய கனேடிய பிரதமர் கனடாவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
நெதன்யாகுவுடன் விவாதம்
காசா பகுதியில் சிக்கியுள்ள கனேடிய மக்கள் மிக விரைவாக வெளியேற முடியும் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
THE CANADIAN PRESS/Justin Tang
இந்த நிலையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் விவாதித்துள்ளார்.
ட்ரூடோ கோரிக்கை
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'இன்று நெதன்யாகுவுடன் பேசினேன். சர்வதேச சட்டத்தின்படி, இஸ்ரேலுக்கான கனடாவின் ஆதரவையும், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமையையும் நான் மீண்டும் உறுதிப்படுத்தினேன்.
ஹமாஸ் பிடியில் உள்ள பணயக் கைதிகளை நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம்' என தெரிவித்துள்ளார்.
AMOS BEN-GERSHOM/GPOJe me suis entretenu avec @Netanyahu aujourd’hui. J’ai réaffirmé l’appui du Canada envers Israël et son droit de se défendre, conformément au droit international. Nous avons aussi réclamé la libération immédiate et sans condition des otages détenus par le Hamas.
— Justin Trudeau (@JustinTrudeau) November 5, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |