காசா மருத்துவமனை தாக்குதலில் 500 பேர் மரணம்! அதிர்ச்சியில் உறைந்ததாக கூறிய ட்ரூடோ
காசாவில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500 பேர் பலியானதற்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
500 பேர் பலி
அல்-அக்லி மருத்துவமனையில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதில் 500 பேர் பலியானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இது யாரால் நிகழ்த்தப்பட்டது என்பது குறித்து உறுதியான தகவல் கிடைக்கவில்லை. எனினும், இஸ்ரேல் தரப்பு இந்த தாக்குதலில் தங்களுக்கு பங்கில்லை என தெரிவித்துள்ளது.
ட்ரூடோ வேதனை
இந்த நிலையில், 500 பேர் பலியான துயர சம்பவத்திற்கு ஜஸ்டின் ட்ரூடோ வேதனை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
'காசாவில் உள்ள அல் அஹ்லி அரபு மருத்துவமனையில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து நான் திகிலடைந்தேன். என் எண்ணங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் உள்ளன.
அப்பாவி பொதுமக்கள் பாதுகாக்கப்படுவதும், சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்துவதும் இன்றியமையாதது. என்ன நடந்தது என்பதை நாம் ஒன்றாக தீர்மானிக்க வேண்டும். பொறுப்புக்கூறல் இருக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
I’m horrified by the loss of life at Al Ahli Arab hospital in Gaza. My thoughts are with those who lost loved ones. It is imperative that innocent civilians be protected and international law upheld. Together, we must determine what happened. There must be accountability.
— Justin Trudeau (@JustinTrudeau) October 18, 2023
AP Photo/Abed Khaled
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |