37 ஆண்டுகளுக்கு பின்..ரஷ்யாவால் சிறைபிடிக்கப்பட்ட ஊடகவியலாளர்..விடுவிக்க முயற்சிக்கும் ட்ரூடோ
அமெரிக்க ஊடகவியலாளர் ஈவன் கெர்ஸ்கோவிச்சை விடுவிப்பது குறித்து, ஜோ பைடனுடன் பேசியதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஊடகவியலாளர்
மாஸ்கோவிற்கு கிழக்கே 800 மைல் தொலைவில், ரஷ்ய நகரமான Yekaterinburgயில் அமெரிக்க ஊடகவியலாளர் ஈவன் கெர்ஸ்கோவிச் ஒரு ஊடக பயணம் மேற்கொண்டார். ஆனால் அவர் உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் ரஷ்ய அதிகாரிகளால் சிறை பிடிக்கப்பட்டார்.
1986ஆம் ஆண்டுக்கு பிறகு ரஷ்ய அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட முதல் அமெரிக்க ஊடகவியலாளர் இவர் தான். அதேபோல் சமீபத்திய ஆண்டுகளில் ரஷ்யாவால் தவறாகக் காவலில் வைக்கப்பட்டதாக வாஷிங்டனால் கருதப்படும் பல அமெரிக்கர்களில் கெர்ஸ்கோவிச்சும் ஒருவர் ஆவார்.
விடுவிப்பது குறித்து பேசிய ட்ரூடோ
இந்த நிலையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். பல விடயங்கள் குறித்து இருவரும் உரையாடியபோது கெர்ஸ்கோவிச்சின் விடுதலை குறித்தும் பேசியதாக ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'இன்று நானும் அமெரிக்க ஜனாதிபதி பைடனும் தொலைபேசி வாயிலாக, அவரது சமீபத்திய வருகை மற்றும் நமது எல்லைகளைப் பாதுகாப்பதற்கும், தூய்மையான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் பேசினோம். நாங்கள் உக்ரைனைப் பற்றியும் பேசினோம், அதேபோல் ஈவன் கெர்ஸ்கோவிச்சை உடனடியாக விடுவிக்க ரஷ்யாவை அழைக்க வேண்டும் என்றும் பேசினோம்' என தெரிவித்துள்ளார்.
Au téléphone aujourd’hui, le @POTUS Biden et moi avons parlé de sa récente visite et du travail à faire pour notamment sécuriser nos frontières et bâtir des économies propres. Nous avons aussi parlé de l’Ukraine et nous appelons la Russie à libérer @EvanGershkovich immédiatement.
— Justin Trudeau (@JustinTrudeau) April 6, 2023
கெர்ஸ்கோவிச் ரஷ்யா வெளியுறவு அமைச்சகத்தால் அந்நாட்டில் ஊடகவியலாளராக பணியாற்ற அங்கீகாரம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.