கனடா பிரதமர் ட்ரூடோ பயணத்தில் திடீர் மாற்றம்... இந்தியாவில் மேலும் ஒருநாள்: வெளியான பின்னணி
இந்தியாவில் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நாட்டிற்கு திரும்ப இருந்த நிலையில் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் அவரது பயண திட்டம் தாமதகம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தங்கும் நிலை
குறித்த விவகாரத்தால் முழு கனேடிய குழுவினரும் இந்தியாவில் தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பிரதமர் ட்ரூடோ, அவரது அதிகாரிகள் குழு மற்றும் பிரதமருடன் பயணிக்கும் ஊடகப்பிரதிநிதிகள் என அனைவரும் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்படவிருந்தனர்.
இந்த நிலையில், புறப்படுவதற்கு சற்று முன்பு, கனேடிய ஆயுதப் படை தொழிநுட்ப கோளாறை கண்டறிந்தது, அதை ஒரே இரவில் சரிசெய்ய முடியாது என்றே கூறப்படுகிறது.
இதனையடுத்து மாற்று ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் வரையில், இந்தியாவில் தங்கியிருக்கும் சூழல் உருவாகியிருப்பதாக பிரதமர் ட்ரூடோ அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு வெள்ளிக்கிழமை இரவு பிரதமர் ட்ரூடோ இந்தியா சென்றுள்ளார். தற்போது பிரதமரும் அவருடன் பயணித்த அதிகாரிகள் குழுவினரும் எப்போது நாடு திரும்புவார்கள் என்ற தகவல் உறுதி செய்யப்படவில்லை.
@ctvnews
பெல்ஜியம் செல்லும் வழியில்
பிரதமர் ட்ரூடோ பயணித்த விமானம் கோளாறில் சிக்குவது இது முதல் முறையல்ல. 2016 அக்டோபரில் இது போன்றதொரு சிக்கலில் மாட்டிக்கொண்ட பிரதமர் ட்ரூடோ மற்றும் அதிகாரிகள் குழு, புறப்பட்ட 30 நிமிடங்களில் மீண்டும் ஒட்டாவா திரும்பியது.
@CP
கனடா-ஐரோப்பா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பொருட்டு பிரதமர் ட்ரூடோ பெல்ஜியம் செல்லும் வழியிலேயே தொடர்புடைய சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |