கனேடிய மக்களின் உயிர்களை பலிவாங்கிய சம்பவம்..போராட்டத்திற்கு உடன் இருப்பேன் என உறுதியளித்த ட்ரூடோ
உக்ரைன் விமானமான PS752 ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் நாளை கடைபிடிக்கப்படுவது குறித்து கனேடிய பிரதமர் ட்ரூடோ ட்வீட் செய்துள்ளார்.
PS752 விமானம்
கடந்த 2020ஆம் ஆனது ஜனவரி 8ஆம் திகதி, தெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து கீவ் நோக்கி சென்ற PS752 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
அதில் பயணித்த பல கனேடிய குடிமக்கள் உட்பட 176 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சோக சம்பவத்தை நினைவு கூறும் வகையில், நாளைய தினம் எதிர்ப்பாளர்கள் மெக்கில் பல்கலைக்கழகத்தில் இருந்து ICAO அலுவலகத்திற்கு அணிவகுத்து செல்ல உள்ளனர்.
ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு
இந்த நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் ஜஸ்டின் ட்ரூடோ பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'ஈரானிய அரசு மனித உயிர்களை அலட்சியமாக எண்ணி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு PS752 விமானத்தை சுட்டு வீழ்த்தியது. இன்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் நான் பேசியபோது உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான போராட்டத்தில் இடைவிடாமல் உடனிருப்பேன் என்று உறுதியளித்தேன்' என தெரிவித்துள்ளார்.
Almost three years ago, Flight PS752 was shot down because of the Iranian regime’s complete disregard for human life. And when I spoke with the families of the victims today, I promised them we’ll continue to be relentless in our fight for truth, justice, and accountability.
— Justin Trudeau (@JustinTrudeau) January 6, 2023