3 நாட்கள் ஹோட்டல் தனிமை! சொந்த செலவில் கொரோனா சோதனை: கனடா வருபவர்களுக்கு ட்ரூடோ முக்கிய அறிவிப்பு
கனடாவிற்கு வரும் பயணிகள் ஹோட்டல்களில் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதன் பின் அவர்கள் சொந்த செலவில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அதை கட்டுப்படுத்தும் விதமாக கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, கனடாவிற்கு வரும் பயணிகள் மூன்று நாட்கள் வரை ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டும், அவர்கள் கடுமையான மேற்பார்வையின் கீழ் இருப்பர்.
அதன் பின் அவர்கள் கொரோனா பரிசோதனையை தங்கள் சொந்த செலவில் செய்ய வேண்டும். சோதனையின் போது எதிர்மறையாக வந்தால், அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அடுத்த 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.
அப்படி நேர்மறையான முடிவு வந்தால், அவர்கள் அரசாங்கம் தனிமைப்படுத்தும் இடத்திற்கு மாற்றப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கொரோனா பரிசோதனைக்கு அமெரிக்க டொலர் மதிப்பில் 1600 டொலர் ஆகும் என்று கூறப்படுகிறது.
மேலும், கனேடிய விமான நிறுவனங்கள் வரும் ஏப்ரல் இறுதி வரை sunbelt destinations (அமெரிக்காவின் சில பகுதிகள்) ரத்து செய்ய ஒப்புக் கொண்டுள்ளதாகவும், மக்கள் பறக்க வேண்டிய நேரம் இது கிடையாது என்றும் ட்ரூடோ கூறியுள்ளார்.
கனேடியர்கள் மீது பொது சுகாதார அதிகாரிகள் கொண்டுள்ள அக்கறை காரணமாக இந்த கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரம், கனடாவுக்கு உள்வரும் அனைத்து விமானங்களும் மாண்ட்ரீல், டொராண்டோ, கல்கரி மற்றும் வான்கூவர் ஆகிய நான்கு விமான நிலையங்களில் ஒன்றில் தரையிறக்கப்படும்.
அப்படி தரையிரக்கப்படும் போது, வரும் பயணிகள் கட்டாய பி.சி.ஆர் சோதனை, அதாவது கொரோனா பரிசோதனை, அவர்கள் சொந்த செலவில் செய்ய வேண்டும்.