பிரான்சில் வெடித்துள்ளப் போராட்டங்களின் உண்மையானப் பின்னணி: ட்ரம்ப் வைக்கும் குற்றச்சாட்டு
The true reason to the protests that have erupted in France: பிரான்சில் வெடித்துள்ளப் போராட்டங்களின் உண்மையானப் பின்னணி.
பிரான்சில் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் தற்போது விலைவாசி உயர்வு உட்பட பல்வேறு காரணங்களுடன், பூதாகரமாக வெடித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி
பிரான்சில் கடந்த மூன்று வாரங்களாகத் தொடரும் போராட்டங்கள், ட்ரம்ப், நெதன்யாகு உட்பட பல்வேறு வெளிநாட்டுத் தலைவர்களின் குற்றச்சாட்டுகளுக்கும் விமசர்னங்களுக்கும் இலக்காகி உள்ளது.

அரசியல் ரீதியாக பல்வேறு உச்சங்களை எல்லம் தொட்ட பிரான்ஸ், தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தடுமாறுகிறது. ஐரோப்பாவிலேயே வெளிநாட்டவர்கள் அதிகமாக வாழும் நாடு ஜேர்மனி என்ற நிலையில், பிரான்சில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை 11 மில்லியன்.
இதில் அதிக எண்ணிக்கையிலான இஸ்லாமியர்கள் குடியேறியுள்ள நாடும் பிரான்ஸ் என்றே தெரிய வருகிறது. ஆனால் அவர்கள் அரசியல், சமூக, பொருளாதாரத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளவில்லை என்று வலதுசாரிகளால் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகிறது.
ஆனால், அவர்களுக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என இடதுசாரிகள் விளக்கமளிக்கின்றனர். மட்டுமின்றி, உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் உள்ளிட்ட காரணிகளால், பிரான்ஸ் அரசாங்கம் பொதுச்செவைகளுக்காக அதிக கடன் வாங்கும் நிலை ஏற்பட்டதால், அதன் தரம் நாளுக்கு நாள் குறையத்தொடங்கியது.
இதனாலையே, அரசு முன்னெடுக்கும் பாடசாலைகளுக்கும் தனியார் பாடசாலைகளுக்கும் மலையளவு வேறுபாடு காணப்பட்டது. அரசாங்கம் முன்னெடுக்கும் பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உட்பட பல்வேறு குறைகள். காரணம் அரசாங்கத்திடம் போதுமான நிதி இல்லை.
மட்டுமின்றி வேலைவாய்ப்பு இன்மையும் விலைவாசி உயர்வும் இளைஞர்களை போராட்டக் களத்திற்கு தூண்டியுள்ளது. மூன்று வாரங்களுக்கு முன்னர் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது, தற்போது நாடு முழுவதும் கலவரங்கள், கொள்ளை, பொது சொத்துக்களுக்கு சேதம் என வன்முறைப் போராட்டமாக வெடித்துள்ளது.
நான்கு மடங்கு
இதில் இடதுசாரிகள் மற்றும் தீவிர வலதுசாரிகள் நுழைந்து போராட்டங்களைத் தீவிரப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. மேலும், கடந்த நான்காண்டுகளாக பிரான்ஸ் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.

கடன் சுமையே அதிகமாக இருப்பதால், அரசாங்கம் இதில் எந்த முடிவையும் எடுக்க முடியாத சூழலில் உள்ளது. இதனாலையே புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாத நிலை உள்ளது.
இந்த இக்கட்டான நிலையில் இருந்து மீண்டுவர நான்கு மடங்கு மதிப்புக் கூட்டு வரி விதிக்க வேண்டும். ஆனால் ஏற்கனவே கடும் நெருக்கடியில் இருக்கும் மக்களால், அப்படியான ஒரு சூழலை எதிர்கொள்ள முடியாது என்ற நிலையும் உள்ளது.

இந்த நிலையில், ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் பிரான்சை தீவிர வலதுசாரிகள் பக்கம் திருப்பும் என்றே கூறப்படுகிறது. இருப்பினும் வலது சாரிகள் ஒருகட்டத்தில் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் நிலைக்கு வரலாம் என்றும் அல்லது, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் போன்று கடும்போக்கான முடிவுகளை எடுத்து, பிரான்சின் நிலைமை எதிர்பாராத கட்டத்திற்கும் கொண்டுசெல்ல வாய்ப்பிருப்பதாகவும் கூறுகின்றனர்.
பிரன்சின் தற்போதைய நெருக்கடிகளுக்கு குடியேறியவர்களே முழுமையான காரணம் என டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். மட்டுமின்றி, இஸ்ரேல் பிரதமரும் தீவிர இஸ்லாமியர்களின் ஊடுருவலே காரணம் என்றும் தேர்தல் பரப்புரைகளில் பேசி வருகிறார்.
ஆனால் இவை அனைத்தும் வெறும் தேர்தல் ஆதயத்திற்காக பேசப்படும் முட்டாள்த்தனமான கருத்து என்றே பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பதிலளித்துள்ளார்.