இந்தியாவின் விலைமதிப்பற்ற வைரம் - பிரித்தானிய ராணியின் கிரீடத்திற்கு சென்றது எப்படி?
உலகில் நீண்ட காலம் ஆட்சிசெய்த இரண்டாவது நபர் என்ற பெருமையை பெற்ற இரண்டாம் எலிசபெத் ராணியின் கிரீடத்தில் இருந்த வைரமானது இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பிரித்தானிய ராணி
1952 ஆம் ஆண்டு பெப்ரவரி 6 ஆம் திகதி இங்கிலாந்தின் ராணியாக இரண்டாம் எலிசபெத் மகாராணி பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்த முடிசூட்டு விழாவானது உலகம் முழுவதும் வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. மற்றும் ராணியின் வேண்டுகோளின் பேரில் முதல் முறையாக தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது.
[
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு முடிசூட்டு விழாவின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் அந்த தொலைக்காட்சி ஒளிப்பரப்பு எடுத்துக்காட்டியது.
பிரித்தானிய அரண்மனையில் நிகழும் அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் ராணிகள் கிரீடம் அணிந்துக்கொள்வது மரபாகும்.
அவ்வாறு தொன்று தொட்டு அணிந்து வந்த ராணியின் கீரிடத்தில் விலை மதிப்பற்ற "கோஹினூர்" என்ற வைரம் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த கிரீடத்தை தற்போது ராணி கமீலா அணிந்திருக்கிறார்.
அவருக்கு முதல் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணி அணிந்திருந்தார்.
ராணி அணிந்திருந்த கிரீடத்தை ராஜா அணியக் கூடாது. எனவே தான் அது மன்னர் சார்லஸ் சூடாமல் ராணி கமீலாவின் தலைக்கு சூடப்பட்டது.
இந்த கிரீடத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் வைரத்தின் பின்னால் சுவாரஸ்ய கதை ஒன்று இருக்கிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியா - இங்கிலாந்து ராணிக்கு சென்றது எப்படி?
105 கேரட் அதாவது 21.6 கிராம் எடை கொண்ட இந்த கோஹினூர் வைரமானது இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவின் ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே உள்ள கொல்லூர் வைர சுரங்கத்தில் மட்டுமே இது கிடைக்கக் கூடியதாக இருந்துள்ளது.
விலை மதிப்பற்ற இந்த வைரம் இந்து, மொகலாய, பெர்சியர், ஆப்கான், சீக்கியர் என்ற பல்வேறு காலகட்டங்களை சேர்ந்த மன்னர்களின் வசம் இருந்திருக்கிறது.
இந்த வைரத்திற்காக இவர்களுக்குள் பல போர்களும் நிகழ்ந்துள்ளன. பல போரின் முடிவில் விலைமதிப்பற்ற கோஹினூர் வைரமானது மொகலாய மன்னர் பாபரின் வசம் சென்றது.
நாளடைவில் அவருடைய வாரிசான ஷாஜகான் மற்றும் அவுரங்க சீப் போன்ற மன்னர்களிடம் பயணித்துக்கொண்டு இருந்தது.
பிரித்தானியாவின் ஆட்சிக்கு கீழ் இந்தியா சென்ற பின்னர், கிபி 1851ஆம் ஆண்டு கோஹினூர் வைரமானது இங்கிலாந்து அப்போதைய ராணி விக்ட்டோரியாவின் கிரீடத்தில் அலங்கரிக்கப்பட்டது.
19 ஆம் நூற்றாண்டில் கொண்டுவரப்பட்ட இந்த வைரமானது Tower of London இல் அரச குடும்பத்தின் ஆபரணங்களின் ஒரு பகுதியாக காட்சிப்படுத்தப்பட்டது.
ராணி விக்ட்டோரியாவின் ஆட்சிக்கு பின்னர் இரண்டாம் எலிசபெத் ராணி ஆட்சிக்கு வந்தார். எனவே அந்த வைரமும் கிரீடத்துடன் ஒப்படைக்கப்பட்டது.
இது கடந்த எழுபது ஆண்டுகளாக இரண்டாம் எலிசபெத் ராணியிடமே இருந்து வந்தது. அவரது மறைவிற்கு பிறகு அந்த வைரமானது இளவரசியான டயானாவின் கிரீடத்திற்கு வரும் என பலரும் எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால் அது தற்போது சார்ள்ஸின் மனைவியான கமிலா பார்க்கர் பவ்லஸ் அணியும் கிரீடத்தை தற்போது அலங்கரித்து வருகிறது.
சார்ள்ஸ்க்கும் அவரது முதல் மனைவி டயானாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 1996ஆம் ஆண்டு இருவரும் பிரிந்துவிட்டனர்.
அதன் பின்னர் 2005 ஆம் ஆண்டு இளவரசர் சார்லஸ் கமிலா பார்க்கரை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். இதனடிப்படையில் அவரே ராணியும் ஆனார்.
இங்கிலாந்தில் தற்போது அந்த வைரமானது இருந்தாலும் அது எப்போதும் இந்தியாவின் சொத்து என்பதை வரலாற்றில் இருந்து அழிக்க முடியாது.
இந்திய அரசாங்கத்தினால் மீள பெற்றுக்கொள்ள நினைத்தாலும் அதை பெற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்தியாவால் திரும்ப கோரப்பட்டாலும், இங்கிலாந்து அரசு அதை தொடர்ந்து மறுத்து வருகிறது.
இதை மீள பெறுவதற்கு இந்தியா மீண்டும் முயற்சிக்கக் கூடாது என அந்நாட்டு அரசாங்கம் இந்தியா உச்சநீதிமன்றத்திடம் கூறியுள்ளது.
சிவில் அமைப்பொன்று இந்தியாவிற்கு அந்த வைரத்தை கொண்டு வர வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது.
இதற்கு பதில் அளிக்கும் விதமான பிரித்தானிண அரசாங்கம், “அந்த வைரம் பிரிட்டனால் திருடப்படவில்லை என்ற காரணத்தினாலேயே இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக” தெரிவித்துள்ளது.
மேலும் இந்த கோஹினூர் வைரத்தை பஞ்சாபி மகாராஜா ரஞ்சித் சிங், அன்பு பரிசாக பிரித்தானியாவிற்கு வழங்கியுள்ளதாக இந்தியாவின் கலாசார அமைச்சு பிரமாணப் பத்திரம் மூலம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட இந்த விலைமதிப்பு மிக்க வைரம் தற்போது ராணி கமீலாவிடம் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |