புதுவாழ்வைத் துவக்குவதற்காக பிரித்தானியா வந்த வெளிநாட்டுப் பெண்: தவறான நபரிடம் சிக்கியதால் முடிந்த வாழ்வு
திருமண வாழ்வு முறிந்ததால், புதுவாழ்வைத் துவக்குவதற்காக பிரித்தானியா வந்த பிலிப்பைன்ஸ் நாட்டவரான இளம்பெண் ஒருவர், தவறான நபர் ஒருவரிடம் சிக்கியதால் அவரது வாழ்வும் முடிந்ததுடன், அவரது குழந்தையும் கொல்லப்பட்ட பயங்கரம் ஒன்று பிரித்தானியாவில் நடந்தது.
இரட்டைக் கொலை
பிலிப்பைன்ஸ் நாட்டவரும், தற்போது பிரிஸ்டலில் வாழ்ந்துவருபவருமான பென்னிலின் (Bennylyn Burke, 25) என்ற இளம்பெண்ணை டேட்டிங் தளம் ஒன்றின் மூலமாக குறிவைத்த ஆண்ட்ரூ (Andrew Innes, 52) என்னும் ஸ்கொட்லாந்தில் வாழும் நபர், பென்னிலினையும் அவரது மகளான ஜெலிகா (Jellica, 2)ஐயும் கொலை செய்து தனது சமையலறையில் புதைத்தார்.
Image: PA
கொலை செய்ததற்காக கூறிய காரணம்
பென்னிலின் பார்ப்பதற்கு தன் மனைவியைப்போலவே இருந்ததாகவும், அவரது உடல் அச்சு அசலாக தனது முன்னாள் காதலி ஒருவருடைய உடலைப் போலவே இருந்ததாகவும் கூறிய ஆண்ட்ரூ, அவரைப் பார்க்கும்போது, தன்னை விட்டுப் பிரிந்து ஜப்பானில் வாழும் தன் முன்னாள் மனைவி செய்த மோசமான செயல்களும், தனது முன்னாள் காதலி ஒருவர் தன்னை பயங்கரமான நிலையில் விட்டுவிட்டு போனதும் நினைவுக்கு வந்ததாகவும், அதனால் பயங்கர ஆத்திரம் ஏற்படவே, தான் பென்னிலினைக் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Image: Handout
இரண்டு வயது குழந்தையை ஏன் கொலை செய்தீர்கள் என்று கேட்டால், குழந்தை தன் அம்மாவைத் தேடியதாகவும், ஆகவே, அவளைத் தன் தாயுடன் அனுப்புவதுதான் சரி என தனக்குத் தோன்றியதால் அவளைக் கழுத்தை நெறித்துக் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார் ஆண்ட்ரூ.
Image: Daily Record
உண்மை அதுவல்ல
ஆனால், அவர் கூறியதில் உன்மை இருப்பது போல் தெரியவில்லை. ஏனென்றால், வேறொரு சிறுமியையும் ஏமாற்றி தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வந்த ஆண்ட்ரூ, அந்தச் சிறுமியை தன் வீட்டில் கட்டிப்போட்டு, அவளையும், குழந்தை ஜெலிகாவையும் வன்புணர்ந்ததும் தெரியவந்துள்ளது. பென்னிலினைக் கொலை செய்ததையும், தன்னிடம் ஆண்ட்ரூ மோசமாக நடந்ததையும் அந்தச் சிறுமியே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Image: Daily Record
குடும்பத்தினர் கோரிக்கை
திருமண வாழ்வு முறிந்தபின், தன் சகோதரி பிரித்தானியாவில் மீண்டும் ஒரு புதுவாழ்வைத் துவங்கி மகிழ்ச்சியாக வாழ்வதாக தாங்கள்ச ந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில், இப்படி ஒரு மோசமான நபர் தன் சகோதரியையும் குழந்தையையும் கொன்றுவிட்டதாக செய்தி கிடைத்ததால் அதிர்ச்சியில் உறைந்துபோனதாக தெரிவித்துள்ள பென்னிலினின் சகோதரியான Shella Aquino, குற்றவாளிக்கு வழங்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை போதாது, பிரித்தானியாவில் முடிவுக்குக்குக் கொண்டுவரப்பட்ட மரண தண்டனையை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்று கோரியுள்ளார்.
Image: PA
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |