முதன்முறையாக ஆன்டி பர்னாமை சந்தித்த ட்ரம்ப்: சந்திப்பில் நடந்தது என்ன?
Trump says he can do business with Burnham: முதன்முறையாக பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்னாமை ட்ரம்ப் சந்தித்த நிலையில், தன்னால் ஆன்டியுடன் பிசினஸ் செய்யமுடியும் என்று கூறியுள்ளார் ட்ரம்ப்.
ஆன்டி பர்னாம் பிரித்தானிய பிரதமராக பொறுப்பேற்ற பின், முதன்முறையாக அவரை சந்தித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப்.
நடந்தது என்ன?
விடயம் என்னவென்றால், ட்ரம்ப் ஆன்டி பர்னாமை தனது அலுவலகத்தில் சந்திக்கவில்லை.

ஆன்டி பர்னாமும், ட்ரம்பும், நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா பொதுச்சபையின் 81ஆவது கூட்டத்தின்போது சந்தித்துப் பேசினார்கள்.
பேச்சுவார்த்தைகளுக்குப் பின் ஊடகவியலாளர்களை இரு தலைவர்களும் சந்தித்த நிலையில், சந்திப்பு குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
அப்போது, இயற்கையாகவே ஆன்டி ஒரு வர்த்தகர் என்று கூறிய ட்ரம்ப், ஆகவே, அவருடன் பிசினஸ் செய்யமுடியும் என்று நான் நினைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நான் சொல்வதை அவர் புரிந்துகொள்கிறார், என்ன செய்யவேண்டும் என்பதும் அவருக்கு புரிந்திருக்கிறது என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இந்நிலையில், முன்னாள் பிரதமரான சர் கெய்ர் ஸ்டார்மருக்கும் ட்ரம்புக்கும் கூட முதலில் நல்ல உறவுதான் இருந்தது.
ஆனால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு பிரித்தானிய தளங்களை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, இருவருக்குமிடையிலான உறவு பாதிக்கப்பட்டுவிட்டது என குறிப்பிட்டுள்ளன பிரித்தானிய ஊடகங்கள்.