முடங்கிய அரசாங்கம்... ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ட்ரம்ப் நிர்வாகம்
அரசாங்கம் முடக்கப்பட்டுள்ளதன் மத்தியில் ஜனநாயகக் கட்சியினருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ட்ரம்ப் நிர்வாகம் ஆயிரக்கணக்கான பெடரல் ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது.
கணிசமான எண்ணிக்கை
வெள்ளை மாளிகை நிர்வாக அலுவலக இயக்குனர் ரஸ்ஸல் வோட் வெள்ளிக்கிழமை காலை தமது சமூக ஊடகத்தில், ஊழியர்கள் பணிநீக்கம் தொடர்பில் அறிவித்தார்.
அவரது அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், பணிநீக்கம் தொடங்கியுள்ளதாகவும் அவை கணிசமான எண்ணிக்கை என்றும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், ஏழு துறைகள் 4,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம் வெளிப்படுத்தியுள்ளது.
பெடரல் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது என்ற தனது நீண்டகால இலக்கை மேலும் தீவிரப்படுத்த, இந்த முடக்கத்தத்தைப் பயன்படுத்த இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பலமுறை அச்சுறுத்தியுள்ளார்.
சட்டப்படி, பெடரல் அரசாங்கம் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக குறைந்தபட்சம் 30 நாட்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். ஆனால், ரஸ்ஸல் வோட் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவை அடுத்து, கருவூலம், சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் (HHS) ஊழியர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக தொடர்புடைய துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பணிநீக்கம் நடந்ததில்லை
இந்த நிலையில், முதன்மையான இரு தொழிற்சங்கங்கள், அமெரிக்க அரசு ஊழியர் கூட்டமைப்பு மற்றும் AFL-CIO ஆகியவை, முடக்கத்தின் போது பணிநீக்கங்களை மேற்கொள்வதற்கான ரஸ்ஸல் வோட்டின் அறிவிப்பின் சட்டப்பூர்வத்தன்மையை எதிர்த்து வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்தப் பணிநீக்கங்களில் கால் பங்கிற்கும் அதிகமானவை கருவூலத் துறையில் செய்யப்படுவதாகவும், அங்கு சுமார் 1,446 ஊழியர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. HHS சுமார் 1200 ஊழியர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அரசாங்கம் முடக்கத்தின் போது பணிநீக்கம் நடந்ததில்லை என்றும், இதுவே முதல் முறை எனவும் கூறப்படுகிறது. முடக்கத்தின் போது பெடரல் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு அளிக்கப்படும் என்றும், முடக்கம் முடிவிற்கு வந்ததன் பின்னர் அவர்கள் வேலைக்கு திரும்புவார்கள் என்றே தெரிவிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |