அதற்கு வாய்ப்பில்லை... இறுதியில் உண்மையை ஒப்புக்கொண்ட ட்ரம்ப்
அமெரிக்காவில் எவரும் மூன்றாவது முறையாக ஜனாதிபதி பொறுப்புக்கு வர வாய்ப்பில்லை என்பது தமக்கு தெரியும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.
வாழ்நாள் ஜனாதிபதியாக
அமெரிக்க ஜனாதிபதியாக மூன்றாவது வாய்ப்பு அமைந்தால், அதை ஏற்றுக்கொள்ள தயார் என ட்ரம்ப் இதுவரை கூறி வந்துள்ளார். தென் கொரியாவில் APEC மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு, ஜப்பானுக்கு புறப்படும் முன்னர் செய்தியாளர்களிடம் அதை பகிர்ந்துகொண்டார்.

தென் கொரியாவில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை ட்ரம்ப் சந்திக்க இருக்கிறார். சீனாவில் அரசியல் சாசன திருத்தத்தின் அடிப்படையில் ஜி ஜின்பிங் வாழ்நாள் ஜனாதிபதியாக பொறுப்பில் இருக்கிறார்.
இந்த நிலையில் ட்ரம்பின் முன்னாள் அரசியல் ஆலோசகர்களில் ஒருவரான ஸ்டீவ் பானன் தெரிவித்த கருத்து நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ட்ரம்ப் மூன்றாவது முறையும் ஆட்சிக்கு வருவார் என குறிப்பிட்ட பானன், அதற்கான திட்டங்கள் ரகசியமாக தீட்டப்படுகிறது என்றார்.
அனுமதி இல்லை
அரசியலமைப்பின் 22வது திருத்தமானது, இரண்டு முறை ஜனாதிபதி பொறுப்புக்கு தெரிவு செய்யப்பட்ட ஒருவர் மீண்டும் போட்டியிட முடியாது என்பதை தெளிவாகக் குறிப்பிடுகிறது.
இதன் அடிப்படையிலேயே, தனக்கு மீண்டும் ஒருமுறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதி இல்லை என்பது தெரியும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, அது வருந்தத்தக்க விடயம் என குறிப்பிட்ட அவர், பெருந்தலைவர்கள் பலர் நமக்கு முன்னோடிகளாக உள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே இந்த விடயத்தில் ட்ரம்பிற்கு இன்னொரு வாய்ப்பில்லை என சபை சபாநாயகர் மைக் ஜான்சன் வெளிப்படையாகவே பதிலளித்திருந்தார். ஆனால், ஜான்சனின் கருத்துக்கு தாம் பதிலளிக்க விரும்பவில்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |