பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானை மனைவி அறைந்த விடயம்: ட்ரம்ப் கொடுத்த அட்வைஸ்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை அவரது மனைவியான பிரிஜிட் மேக்ரான் அறைந்ததாக கூறப்படும் விடயம் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.
இந்நிலையில், மேக்ரானுக்கு ட்ரம்ப் திருமண விடயத்தில் ஒரு அட்வைஸ் கொடுத்துள்ளார்.
ட்ரம்ப் கொடுத்த அட்வைஸ்
மேக்ரானை அவரது மனைவி அறைந்ததாக கூறப்படும் விடயம் கவனம் ஈர்த்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிடம், ஒரு உலகத் தலைவருக்கு மற்றொரு தலைவர் என்னும் வகையில், மேக்ரானுக்கு திருமணம் தொடர்பில் ஏதாவது அட்வைஸ் கொடுக்க விரும்புகிறீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது.
Fox News ஊடகவியலாளரின் அந்தக் கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், ஆம், கதவு மூடியிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள் என்பதுதான் என்னுடைய அட்வைஸ் என்று கூறியுள்ளார் ட்ரம்ப்.
அதாவது உங்கள் திருமணத்துக்குள் பிரச்சினை இருந்தால்கூட, அதை வீட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள், வெளியே தெரியவிடவேண்டாம் என்னும் ரீதியில் ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.
மேலும், ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும்போது கவனமாக வார்த்தைகளை பயன்படுத்துவதை உறுதி செய்துகொண்ட ட்ரம்ப், நான் மேக்ரானிடம் பேசினேன், அவர் நன்றாக இருக்கிறார், அவர்கள் இருவரும் நன்றாக இருக்கிறார்கள்.
அவர்கள் இருவரும் நல்ல மனிதர்கள், எனக்கு மேக்ரானை நன்றாகத் தெரியும், என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |