ஒரே மாதத்தில் இந்தியா, பாகிஸ்தான் போரை தீர்த்து வைத்தேன்: மீண்டும் அடித்துக்கூறும் ட்ரம்ப்
இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போரை நான்தான் தீர்த்து வைத்தேன் என அமெரிக்க டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
போர்ப்பதற்றம்
ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் அதிகரித்தது.
பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது. ஆனால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) 'நான்தான் இந்தியா-பாகிஸ்தான்' போரை நிறுத்தினேன் என்று கூறினார்.
அவர் சமூக ஊடகங்களில் பலமுறை இதனை அறிவித்து, பல சந்தர்ப்பங்களில் தனது கூற்றை மீண்டும் கூறி வருகிறார்.
மீண்டும் ஒருமுறை
அதேபோல் தற்போது மீண்டும் ஒருமுறை டொனால்ட் ட்ரம்ப் இந்தியா-பாகிஸ்தான் மோதலை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக பெருமை கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவரது பதிவு ஒன்றில், "நான் அதை தீர்த்து வைத்தேன். வர்த்தகத்துடன் அதை தீர்த்து வைத்தேன். அவற்றில் பலவற்றை வர்த்தகத்துடன் தீர்த்து வைத்தேன். ' கேளுங்கள், நீங்கள் சண்டையிடப் போகிறீர்கள். நீங்கள் விரும்பும் அளவிற்கு போராடலாம். அதாவது, உங்கள் இதயங்களை விட்டு வெளியேறி போராடுங்கள். ஆனால், நாங்கள் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை செய்யவில்லை' என்று நான் சொன்னேன்.
திடீரென்று, அவர்கள் ஒரு போரை முடிக்காமல் போய்விடுகிறார்கள்.
நான் நிறைய போர்களைத் தீர்த்து வைத்தேன். ஒரு மாதத்தில் ஒரு போரை சராசரியாகக் கொண்டு நான் ஒரு தீர்வைக் கண்டேன் என்று நினைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |