கமலா ஹரிஸை முந்தும் ட்ரம்ப்... தேர்தல் நாஸ்ட்ரடாமஸின் கணிப்பு தவறானதா?
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், ட்ரம்ப், கமலா ஹரிஸை முந்துவதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
ஆக, தேர்தல் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் நபரின் கணிப்பு தவறாகியுள்ளதா என்னும் ரீதியில் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிடத் துவங்கியுள்ளன.
தேர்தல் நாஸ்ட்ரடாமஸ்
1947ஆம் ஆண்டு பிறந்தவரான ஆலன் லிக்மேன் (Allan Lichtman), வாஷிங்டனிலுள்ள அமெரிக்கப் பல்கலையில் பேராசிரியராகப் பணியாற்றும், புகழ்பெற்ற ஒரு அரசியல் வரலாற்றாளர் ஆவார்.
அவர், ’Keys to the White House’ என்னும் 13 விடயங்களின் அடிப்படையில், தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்பதை கணிக்கக்கூடியவர் ஆவார்.
42 ஆண்டுகளாக, அவர் தேர்தல் முடிவுகளை துல்லியமாக கணித்துவந்துள்ளார்.
கணிப்பு தவறானதா?
2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹரிஸ் வெற்றி பெறுவார் என செப்டம்பர் மாதம் 5ஆம் திகதியே கணித்துக் கூறிவிட்டார் ஆலன்.
ஆனால், தேர்தல் முடிவுகள் முக்கிய மாகாணங்களில் ட்ரம்ப் முந்துவதாக தெரிவிக்கின்றன.
ஆக, தேர்தல் நாஸ்ட்ரடாமஸின் கணிப்பு தவறாகிவிட்டதாக என ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன?
ஆலன் என்ன சொல்கிறார்?
42 ஆண்டுகளாக தேர்தல் முடிவுகளைக் கணித்துக் கூறியுள்ளேன் என்று கூறும் ஆலன், ஒவ்வொரு முறையுமே வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்பது போல் பதற்றமாகத்தான் இருக்கும்.
ஆனால், இம்முறை வயிற்றுக்குள் ஒரு கூட்டம் காகங்கள் பறப்பது போல் உள்ளது என்று அவரே கூறுகிறார்.
என் கவலை தேர்தல் முடிவுகளைக் குறித்து அல்ல, என் கவலை நாட்டின் எதிர்காலத்தைக் குறித்தது என்கிறார் ஆலன்.
என்றாலும், தன் முடிவை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என்று கூறியுள்ளார் ஆலன்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |