இதனால் நான் மிகவும் கோபப்படுகிறேன்: புடின் குறித்து பேசிய ட்ரம்ப்
விளாடிமிர் புடினுடன் நல்ல உரையாடல் இருந்தாலும், உக்ரைன் மீதான தாக்குதல் தன்னை கோபப்படுத்துவதாக டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மீண்டும் புடினுடன் பேசிய ட்ரம்ப்
உக்ரைன், ரஷ்யா போரை நிறுத்த ட்ரம்ப் அடுத்தடுத்த பேச்சுவார்தைகளில் ஈடுபட்டு வந்தாலும், இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை (Vladimir Putin) சந்திக்க வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) காத்திருந்தாலும் அதற்காக திட்டமிடப்படவில்லை என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறினார்.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய டொனால்டு ட்ரம்ப் (Donald Trump) வாஷிங்டன் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு விளாடிமிர் புடினுடன் மீண்டும் பேசியதாக கூறினார்.
நான் மிகவும் கோபப்படுகிறேன்
அப்போது அவர், "அவருடன் நான் நடத்தும் ஒவ்வொரு உரையாடலும் ஒரு நல்ல உரையாடல். பின்னர் துரதிர்ஷ்டவசமாக கீவ் அல்லது எங்காவது ஒரு குண்டு வீசப்படுகிறது. அதைப் பற்றி நான் மிகவும் கோபப்படுகிறேன்" என்றார்.
முன்னதாக, புடினுக்கு பிடிக்காததால் ஜெலென்ஸ்கியை சந்திக்க மறுப்பதாகவும், நாங்கள் போரை முடிக்கப் போகிறோம் என்று நினைக்கிறேன் என்றும் ட்ரம்ப் கூறியிருந்தார்.
இதற்கிடையில் உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் மற்றும் அவர்களது சகாக்களான பிரித்தானியா, பிரான்ஸ், பின்லாந்து, ஜேர்மனி, இத்தாலி, போலந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களுடன் கூட்டாக பேசியதாக அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |