கனேடிய தயாரிப்புகளே வேண்டாம்... கோபத்தில் கொந்தளித்த ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்தே சரமாரியாக சில நாடுகள் மீது வரி விதிப்புகள் குறித்து அறிவிப்பு வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார் ட்ரம்ப்.
ஆனால், கனடா பதிலுக்கு வரி விதிப்பதாக கூறினால் மட்டும் ட்ரம்பால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை, கோபத்தில் கொந்தளிக்கிறார் அவர்.
கனேடிய தயாரிப்புகளே வேண்டாம்...
ஆம், ட்ரம்பின் வரி விதிப்புகளுக்கு பதிலடியாக, கனடாவின் ஒன்ராறியோ மாகாணம், மின்சாரத்துக்கு 25 சதவிகித கூடுதல் கட்டணம் விதிக்கப்போவதாக அறிவித்தது.
உடனே கோபமடைந்த ட்ரம்ப், ஏற்கனவே கனடா பல அமெரிக்க தயாரிப்புகளுக்கு கூடுதல் வரி விதிக்கிறது. உங்களுக்கு அதற்கு அனுமதி கூட கிடையாது என கொந்தளித்துவிட்டார்.
தனது சமூக ஊடகப் பக்கத்தில், கனடா மீதான தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ள ட்ரம்ப், உங்கள் கார்களும் எங்களுக்கு வேண்டாம், உங்கள் மரக்கட்டைகளும் வேண்டாம், உங்கள் மின்சாரமும் வேண்டாம்.
அதை நீங்கள் விரைவில் உணர்ந்துகொள்வீர்கள் என்று குறிப்பிட்டுள்ளதுடன், தனது சுலோகமான ’Make America Great Again’ என்று கூறி தனது செய்தியை முடித்துள்ளார் ட்ரம்ப்.
நேற்று காலை இந்த செய்தி வெளியான நிலையில், மாலையில் நிலைமை சற்று மாறியுள்ளது.
அமெரிக்க வர்த்தகச் செயலரான Howard Lutnick என்பவரும், கனடாவின் நிதி அமைச்சரான Dominic LeBlancம், ஒன்ராறியோ பிரீமியரான Doug Fordம், நாளை வியாழக்கிழமை சந்தித்து மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |