பெண் என்றால் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த அதிபர் டிரம்ப்
பெண் என்றால் என்ன என்ற கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிலளித்துள்ளார்.
மூன்றாம் பாலின தடை
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றத்தில் இருந்து, பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.
இதில், அமெரிக்காவில் ஆண், பெண் என இரு பாலினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும் என அறிவித்தார்.
அதை தொடர்ந்து, அமெரிக்கா ராணுவத்தில் திருநங்கைகள் பணியாற்ற முடியாது, பெண்களுக்கான விளையாட்டுகளில் திருநங்கைகள் பங்கேற்க முடியாது, தனி சிறைகளில் உள்ள மூன்றாம் பாலின கைதிகளை ஆண்கள் சிறைக்கு மாற்றுவது என பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.
இந்நிலையில் வாஷிங்டன்னில் நடைபெற்ற பொது நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அதிபர் டிரம்ப்பிடம் "பெண் என்றால் என்ன? ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிந்துகொள்வது ஏன் முக்கியம்?" என்ற கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர்.
பெண் என்றால் என்ன?
அதற்கு பதிலளித்த டிரம்ப், "பெண் என்பவள் சில சூழ்நிலைகளில் குழந்தையை பெற்றெடுக்கக்கூடிய ஒருவர் என பதிலளிப்பது எளிது" என கூறினார்.
அதை தொடர்ந்து, பெண் என்பவள் ஆண்களை விட மிகவும் புத்திசாலியானவள். பெண் என்பவள் ஒரு ஆணுக்கு வெற்றிக்கான வாய்ப்பைக் கூட அளிக்காதவள். ஒரு பெண் என்பவள் பல சந்தர்ப்பங்களில் மோசமாக நடத்தப்பட்டவள்" என தெரிவித்துள்ளார்.
டிரம்ப் தனது நிர்வாகத்தில், மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகளை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அவரின் இந்த பதில் அரசியல் முக்கியதுவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |