முக்கிய பொறுப்பிற்கு இந்திய வம்சாவளியை நியமித்த ட்ரம்ப்: I'm back என பதிவு
அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் உயர் பொறுப்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குஷ் தேசாயை நியமித்துள்ளார் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்.
டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தனது மந்திரி சபை மற்றும் அரசுத்துறைகளில் பெரும்பாலான இந்திய, இந்திய வம்சாவளி நபர்களை நியமித்தார்.
அந்த வகையில் தற்போது மற்றொரு இந்திய வம்சாவளி நபரை நியமித்துள்ளார். குடியரசு கட்சியின் 2024 தேசிய மாநாட்டிற்கான துணை தொடர்பு இயக்குநராக பணியாற்றிய குஷ் தேசாய், தற்போது வெள்ளை மாளிகையின் ஊடக துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பத்திரிகையாளரான இவர் அயோவா மாகாண குடியரசு கட்சியின் தகவல் தொடர்பு இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
குஷ் தேசாய் தனது நியமனம் குறித்த அறிக்கையை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து "I'm back, back in the DC groove" என குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |