ராணுவ வீரரை பாதுகாப்பு செயலாளராக நியமித்த ட்ரம்ப்: யார் அந்த நபர்?
அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளராக செய்தி தொகுப்பாளர் மற்றும் ராணுவ வீரராக இருந்த Pete Hegseth நியமிக்கப்பட்டுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ஜனவரி 20ஆம் திகதி ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ளார்.
எனினும் அவர் தனது அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களின் பெயர்களை அறிவித்து வருகிறார்.
பாதுகாப்பு செயலாளராக Pete Hegseth என்பவரை ட்ரம்ப் நியமித்துள்ளார். இவர் Fox News செய்தி தொகுப்பாளராக இருந்துள்ளார்.
அதேபோல் இவர் முன்னாள் ராணுவ வீரரும் ஆவார். இவர் தெரிவு செய்யப்பட்டது ஆச்சரியமாக இருந்ததாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
ஏனெனில், ட்ரம்பின் குழு உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டவர் என்று கருதப்பட்டவர்களில் அவரது பெயர் இல்லை.
ஆனால், Hegseth ட்ரம்புடன் நீண்டகால உறவைக் கொண்டிருந்துள்ளார். அவர் ஒரு ராணுவ வீரர் என்பதை ட்ரம்ப் விரும்புவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |