அமெரிக்காவால் தான் கனடா வாழ்கிறது - டாவோஸ் மாநாட்டில் ட்ரம்ப்
அமெரிக்காவால் தான் கனடா வாழ்கிறது என டாவோஸ் மாநாட்டில் ட்ரம்ப் கூறியுள்ளார்.
சுவிட்சர்லாந்து, டாவோஸ் நகரத்தில் நடந்த உலக பொருளாதார மாநாட்டின் (WEF) 56வது ஆண்டு உச்சிமாநாட்டில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், “கனடா அமெரிக்காவால் தான் வாழ்கிறது. அவர்கள் எங்களிடமிருந்து பல இலவசங்களைப் பெறுகின்றனர். நன்றி சொல்லாமல் விமர்சனம் செய்கிறார்கள்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த கருத்து, கனடா பிரதமர் மார்க் கார்னி ஒரு நாள் முன்பு அமெரிக்காவின் மேலாதிக்கத்தை (hegemony) குறித்து விமர்சித்ததற்கு பதிலடியாக வந்துள்ளது.
கார்னி தனது உரையில், “அமெரிக்கா வழிநடத்தும் உலக அமைப்பு சிதைவடைந்து வருகிறது. நடுத்தர சக்திகள் ஒன்றிணையாவிட்டால், அவர்கள் ‘மேசையில்’ இல்லாமல் ‘menu’-வில் இருப்பார்கள்” என்று எச்சரித்துள்ளார்.

கிரீன்லாந்து மீதான வரி திட்டங்களை எதிர்த்து கனடா எடுத்த நிலைப்பாட்டையும் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், “Golden Dome” ஏவுகணை பாதுகாப்பு திட்டம் கனடாவையும் பாதுகாக்கும்” எனக் கூறியுள்ளார்.
இதற்கிடையில், கனடாவின் Globe and Mail பத்திரிகை, அமெரிக்கா படையெடுப்பை எதிர்கொள்ள கனடா இராணுவம் மாதிரி திட்டம் உருவாக்கியுள்ளது என செய்தி வெளியிட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Trump Davos 2026 speech, Trump Canada US relations, Davos World Economic Forum Trump, Canada lives because of US quote, Trump Canada criticism news, US Canada political tensions, Trump Davos highlights, Trump global economy remarks, Canada US defense relations, Trump international politics news