அடித்து நொறுக்கும் கமலா ஹாரிஸ்... 3 மாகாணங்களில் பரப்புரைகளை ரத்து செய்த ட்ரம்ப்
கடந்த 6 வாரங்களுக்கு முன்னர் வெற்றி உறுதி என முடிவு செய்த மூன்று மாகாணங்களில், ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் வருகையை அடுத்து பரப்புரைகளை ரத்து செய்துள்ளார் டொனால்டு ட்ரம்ப்.
நம்பிக்கை இழந்து
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் களமிறங்கியதன் பின்னர் அதுவரை அடுத்த அமெரிக்க ஜனாதிபதி தாம் என கூறி வந்த டொனால்டு ட்ரம்ப், தற்போது நம்பிக்கை இழந்து காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, ஜோ பைடன் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டால் மினசோட்டா, வர்ஜீனியா மற்றும் நியூ ஹாம்ப்ஷயர் ஆகிய மூன்று மாகாணங்களில் வெற்றி உறுதி என டொனால்டு ட்ரம்ப் நம்பியிருந்த நிலையில், தற்போது கமலா ஹாரிஸ் இந்த மாகாணங்களில் முன்னேறி வருவது ட்ரம்புக்கு நெருக்கடியை அளித்துள்ளது.
இதனால் இந்த மாகாணங்களில் பரப்புரைகளை ரத்து செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த மூன்று மாகாணங்களில் வெற்றி உறுதி என கணித்திருந்த ட்ரம்ப், 2020ல் ஜோ பைடன் வென்றிருந்த பென்சில்வேனியா, மிச்சிகன் மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியிருந்தார்.
நிலை கேள்விக்குறி
தற்போது பென்சில்வேனியா மாகாணத்தில் இருவரும் தலா 47 சதவிகித ஆதரவுடன் இருப்பதாக தெரிய வந்துள்ளது. மட்டுமின்றி, வட கரோலினா, ஜார்ஜியா நெவாடா மற்றும் அரிசோனா ஆகிய மாகாணங்களிலும் பெருந்தொகை செலவிட்டு பரப்புரை முன்னெடுத்து வருகிறார் டொனால்டு ட்ரம்ப்.
ஆனால் வேட்பாளராக கமலா ஹாரிஸ் களமிறங்கியதில் இருந்து, இந்த மாகாணங்களிலும் ட்ரம்பின் நிலை கேள்விக்குறி என்றே கூறபப்டுகிறது. வட கரோலினா மாகாணத்தில் மட்டும் 16 மில்லியன் டொலர் செலவிட்டு பரப்புரை முன்னெடுத்துள்ளார் டொனால்டு ட்ரம்ப்.
ஆனால், 1980க்கு பின்னர் ஒரே ஒரு முறை மட்டுமே ஜனநாயகக் கட்சி வென்றிருந்த இந்த மாகாணத்திலும் தற்போது கமலா ஹாரிஸ் முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |