இந்தியாவை சுட்டிக்காட்டி அமெரிக்க தேர்தல் நடைமுறைகளை மாற்றிய டிரம்ப்
அமெரிக்கா அதிபராக 2வது முறை டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து அமெரிக்காவில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.
சமீபத்தில், அமெரிக்கா கல்வித்துறையை கலைக்கும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
தேர்தல் விதிகளில் மாற்றம்
தற்போது, அமெரிக்கா தேர்தல் நடைமுறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்வதற்கான உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
இதன்படி, இனி தேர்தலில் வாக்களிக்க ஒவ்வொரு அமெரிக்கர்களும், தங்களுடைய குடியுரிமையை நிரூபிக்க தேவையான ஆவணங்களை காட்ட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் வாக்காளர் பட்டியல்கள் உள்ளிட்ட விவரங்களை சரிபார்க்க மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். தவறும்பட்சத்தில் அந்த மாகாணங்களுக்கு மத்திய அரசின் நிதியுதவி கிடைக்காது.
முன்னதாக, வாஷிங்டன் உள்ளிட்ட 18 மாகாணங்களில் தேர்தல் நாளுக்கு பிறகு வந்த அஞ்சல் வாக்குகளை ஏற்கும் நடைமுறை இருந்தது. இனிமேல், அஞ்சல் மூலம் பதிவாகும் ஓட்டுகள், தேர்தல் நாள் முடிவதற்குள் வாக்கு பதிவு செய்யப்பட்டு, அது ஏற்கப்பட்டிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டவர்கள், வெளிநாட்டு நிறுவனங்கள், அமெரிக்க தேர்தலுக்கு நன்கொடை வழங்க தடை செய்யப்பட்டுள்ளது.
இந்திய தேர்தலை சுட்டிக்காட்டிய டிரம்ப்
இது குறித்து பேசிய அவர், "இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் வாக்காளர் அடையாளத்தை ஒரு பயோமெட்ரிக் தரவுத்தளத்துடன் இணைக்கின்றன, அதே நேரத்தில் அமெரிக்கா பெரும்பாலும் குடியுரிமைக்கான சுய சான்றளிப்பை நம்பியுள்ளது" என தெரிவித்துள்ளார்.
கடந்த 2020 தேர்தலில் டிரம்ப் தோல்வியற்று, பைடன் வெற்றி போது, தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக டிரம்ப் கடுமையாக குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில் தேர்தல் விதிகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அதே நேரத்தில், இந்தத் தேர்தல் விதிகள் மீது மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் இருப்பதால், இந்த உத்தரவு சட்ட ரீதியான சவால்களை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க குடிமக்களில் 9 சதவிகிதம் பேருக்கு அதாவது சுமார் 2.13 கோடி பேருக்கு குடியுரிமைக்கான உரிய ஆவணங்கள் இல்லை.
இந்த உத்தரவால் அவர்களின் வாக்குரிமை பறிபோகும் என என்று வாக்காளர்களுக்கான உரிமைக் குழுக்கள் கவலை தெரிவித்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |