AI யின் பெயரை SI என மாற்றிய ட்ரம்ப்; டெக் நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
trump changes ai to super intelligence top tech firms signs accord:செயற்கை நுண்ணறிவின் பெயரை சூப்பர் இன்டெலிஜென்ஸ் என மாற்றி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
சூப்பர் இன்டெலிஜென்ஸ்
செயற்கை நுண்ணறிவின் அதிவேகமான வளர்ச்சி, மனித குலத்தையே அழிக்கும் அளவிற்கு ஆபத்தானது, அதன் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என AI நிபுணர்கள் அடுத்தது எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும், Open AI ஏஜென்ட் சமீபத்தில் அவுஸ்திரேலிய மற்றும் அமெரிக்கா அரசாங்கத்தின் இணையதளங்களுக்குள் ஊடுருவியது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களை வெள்ளை மாளிகைக்கு அழைத்து, செயற்கை நுண்ணறிவு மற்றும் அதன் பாதுகாப்பு தொடர்பான அணுகுமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பில் X CEO எலோன் மஸ்க், கூகிள் CEO சுந்தர் பிச்சை, மெட்டாவின் மார்க் ஷூக்கெர்பெர்க், Open AIன் சாம் அல்ட்மேன், ஆந்த்ரோபிக் CEO டாரியோ அமோடே, Nvidiaவின் ஜென்சன் ஹுவாங், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ், ஆப்பிள் நிர்வாகத் தலைவர் டிம் குக் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
செயற்கை நுண்ணறிவை குறிக்கும் ‘Artificial Intelligence – AI’ என்ற பெயருக்குப் பதிலாக ‘Super Intelligence – SI’ என்ற பெயரை பயன்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
ஒப்பந்தம்
மேலும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை உருவாக்குவது அல்லது பகிர்வதில் சீனாவுடன் இணைந்து செயல்ப்படப்போவதில்லை என தெரிவித்துள்ள ட்ரம்ப், அமெரிக்கா இந்த தொழில்நுட்பத்தில் தற்போது உள்ளது போல் தொடர்ந்து முன்னணியில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
'ஒயிட் ஹவுஸ் அக்கார்ட் ஆன் சூப்பர் இன்டலிஜென்ஸ்' என்ற தன்னாட்சி பாதுகாப்பு வழிகாட்டுதல் ஒப்பந்தம் அறிமுகப்படுத்தப்பட்டது.
Great to meet today with @POTUS, @JDVance, @SpeakerJohnson and Administration + tech leaders. Important conversation and we signed today the White House Accord on Super Intelligence.
— Sundar Pichai (@sundarpichai) September 30, 2026
As I shared today, Google has invested hundreds of billions in the last two years alone, with… pic.twitter.com/04EirBfyUX
மொடல்கள் திட்டமிட்டபடி இயங்குவதை உறுதி செய்வதற்கும், ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அதனை விரைவாக கண்டறிந்து சரிசெய்வதற்கும், பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த அந்த நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன.
தங்கள் செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் திட்டமிட்டபடி செயல்படுகின்றனவா என்பதை மதிப்பிடுவதற்கும், தங்கள் தளங்கள் "தொழில்நுட்ப அமைப்புகளைத் திட்டமிடப்படாத வழிகளில் ஊடுருவவில்லை என்பதை உறுதி செய்வதற்கும் நிறுவனங்கள் சுயாதீன தணிக்கையாளர்களுடன் இணைந்து பணியாற்றும்.
இந்த ஒப்பந்தத்தில் ட்ரம்ப், சுந்தர் பிச்சை, டாரியோ அமோடி, மார்க் ஜுக்கர்பெர்க், கிரெக் பிராக்மேன், எலான் மஸ்க் மற்றும் ஜென்சன் ஹுவாங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
"ஒரு விதத்தில், இது கிட்டத்தட்ட ஒரு அரசியலமைப்புச் சட்டம் போன்றது. செயற்கை நுண்ணறிவு கருவிகளின் பாதுகாப்பை மேற்பார்வையிட ஒரு குழுவை அமைப்பேன்" என ட்ரம்ப் கூறினார்.