அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து பிரித்தானியாவைக் காப்பாற்றினேன்... ட்ரம்ப் மீண்டும் அதிரடி
Donald Trump claims he saved the UK from a nuclear attack: அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து பிரித்தானியாவைத் தாம் காப்பாற்றியதாக டொனால்ட் ட்ரம்ப்.
ஈரான் மீது போர் தொடுத்ததன் மூலம் பிரித்தானியாவை அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து காப்பாற்றியதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஒரு மோசமான நபர்
இந்தப் போரில் அமெரிக்காவுக்கு ஆதரவாக களமிறங்க மறுத்ததற்காக பிரித்தானியா மீதான தனது விமர்சனத்தையும் அவர் மீண்டும் முன்வைத்துள்ளார்.
பிரித்தானியா ஒரு திருப்புமுனையை எட்டி வருவதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், புலம்பெயர் மக்களால் லண்டனில் மக்கள் பயணப்பட முடியாத பகுதிகள் உருவாகியுள்ளதாகக் கூறி, அந்நகரத்தின் மீது மீண்டும் ஒரு தாக்குதலைத் தொடுத்தார்.

வியாழக்கிழமையன்று தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, லண்டன் மேயர் சாதிக் கானை ஒரு மோசமான நபர் என வம்பிழுத்த ஜனாதிபதி ட்ரம்ப், அவருடனான தனது நீண்டகாலப் பகையை மீண்டும் கிளறினார்.
ஆனால் ட்ரம்பால் எங்கள் வெற்றியைப் புரிந்துகொள்ளவே முடியாது என்று மேயர் சாதிக் கானின் ஆதரவாளர்கள் தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
ஈரானுடனானப் போரை நியாயப்படுத்திய ஜனாதிபதி ட்ரம்ப், பிரித்தானியாவையும் ஈரானின் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றி வருகிறேன் என்றார்.
ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், அவர்கள் அமெரிக்கா மீது பயன்படுத்துவதை விட ஐரோப்பா மீதே பயன்படுத்த வாய்ப்பு என்றும் ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.
மத்திய கிழக்கில் ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் உச்சகட்டத்தில் உள்ள நிலையில், ட்ரம்ப் பிரித்தானியாவைக் காப்பாற்றவும் வேண்டியே போரை முன்னெடுத்து வந்ததாகத் தெரிவித்தார்.
அணு ஆயுதத்தை உருவாக்குவதைத் தடுக்கும் நோக்கில் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு, ஹார்முஸ் நீரிணை எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தொடர்ந்து செயல்பாட்டில் இருந்தது.
ஆனால், இஸ்ரேல் அழுத்தத்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதன் பின்னர், அந்த நீரிணையில் கப்பல் போக்குவரத்து முடங்கியது. தற்போது அந்த நீரிணையை மீட்பதற்காக ட்ரம்ப் போராடி வருகிறார்.
போர் முடிந்துவிட்டதாக
வளைகுடாப் பாதையில் இஸ்ரேலும் அமெரிக்காவும் உருவாக்கியுள்ள இந்த இடையூறு, பிரித்தானியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளின் பொருளாதாரங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பெட்ரோல் விலையிலும் கடும் உயர்வை உருவாக்கியுள்ளது.
இதனிடையே, GB News ஊடகம் நடத்திய நேர்காணளில், மறந்துவிடாதீர்கள், உங்கள் எண்ணெயில் பெரும் பகுதியை நீங்கள் ஹார்முஸ் நீரிணை வழியாகவே பெறுகிறீர்கள்; ஆனால் அமெரிக்காவுக்கு உதவ நீங்கள் மறுத்து விட்டீர்கள் என்று ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.

ஈரான் உடனானப் போர் முடிந்துவிட்டதாக அறிவிப்பதா என்பது குறித்து, அமெரிக்க ஜனாதிபதி தனது மூத்த உதவியாளர்களுடன் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் கசிந்துள்ள நிலையிலேயே, பிரித்தானியா தமக்கு உதவ முன்வரவில்லை என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிப்பது, இறுதியில் அந்த அரசாங்கம் தனது அணுசக்தித் திட்டத்தைக் கைவிடவோ அல்லது வீழ்ச்சியடையவோ கட்டாயப்படுத்தும் என்று தான் நம்புவதாக ட்ரம்ப் தனது உதவியாளர்களிடம் கூறியுள்ளார் என்றே தெரிய வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |