அணு ஆயுதம் வைத்துள்ள நாட்டுடன் சண்டையிட்டால்.,இப்படி அச்சுறுத்தினேன்: டொனால்ட் ட்ரம்ப்
ரஷ்யா, உக்ரைன் இடையிலான போரை நிறுத்தினால் நோபல் பரிசு பெற முடியும் கூறியதாக டொனால்ட் ட்ரம்ப் பேசியுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்க கார்னர்ஸ்டோன் நிறுவனத்தின் நிறுவனரின் இரவு விருந்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏழு போர்களை நிறுத்தியிருப்பதாக கூறினார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலை வர்த்தகத்தின் மூலம் தீர்த்து வைத்ததாக ட்ரம்ப் மீண்டும் கூறினார்.
மேலும் அவர் இதுவரை ஏழு போர்களை முடிவுக்குக் கொண்டுவந்ததாகவும், அதற்காக நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அவர் பேசுகையில், "உலக அரங்கில் நாம் மீண்டும் ஒருமுறை, இதற்கு முன்பு ஒருபோதும் மதிக்கப்படாத அளவில் மதிக்கப்படும் விடயங்களை செய்கிறோம். நாங்கள் சமாதான ஒப்பந்தங்களை உருவாக்கி வருகிறோம், போர்களை நிறுத்துகிறோம். எனவே இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும், தாய்லாந்து மற்றும் கம்போடியாவிற்கும் இடையிலான போர்களை நிறுத்தினோம்" என்றார்.
நாங்கள் அவற்றையெல்லாம் நிறுத்திவிட்டோம்
மேலும், "இந்தியா மற்றும் பாகிஸ்தானைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அதைப் பற்றி யோசித்தால், நான் அதை எப்படி நிறுத்தினேன் என்பது உங்களுக்குத் தெரியும் - வர்த்தகத்தை வைத்துதான்.
அவர்கள் வர்த்தகம் செய்ய விரும்புகிறார்கள். இரு தலைவர்களிடமும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், நாம் நிறுத்திவிட்ட இந்தப் போர்கள் அனைத்தையும் நீங்கள் பார்க்கும்போது அது தெரியும்.
இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, கம்போடியா, ஆர்மீனியா, அஜர்பைஜான், கொசோவா மற்றும் செர்பியா, இஸ்ரேல் மற்றும் ஈரான், எகிப்து மற்றும் எத்தியோப்பியா, ருவாண்டோ மற்றும் காங்கோ. நாங்கள் அவற்றையெல்லாம் நிறுத்திவிட்டோம். அவற்றில் 60 சதவீதம் வர்த்தகம் காரணமாக நிறுத்தப்பட்டன" என தெரிவித்தார்.
அத்துடன், "இந்தியாவைப் போலவே, 'பாருங்கள், நீங்கள் அணு ஆயுதங்கள் கொண்ட நாட்டுடன் சண்டையிடப் போகிறீர்கள் என்றால், நாங்கள் எந்த வர்த்தகமும் செய்ய மாட்டோம். அவர்கள் நிறுத்திவிட்டார்கள்' என்று நான் கூறினேன்" எனவும் குறிப்பிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |