100வது வயதில் மறைந்த ஜனாதிபதிக்கு நன்றிக்கடன்பட்டுள்ளோம்: டொனால்ட் ட்ரம்ப் அஞ்சலி
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் மறைவுக்கு டொனால்ட் ட்ரம்ப் அஞ்சலி தெரிவித்துள்ளார்.
ஜேம்ஸ் எர்ல் கார்ட்டர்
1977 முதல் 1981 வரை அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தவர் ஜேம்ஸ் எர்ல் கார்ட்டர் (James Earl Carter).
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற இவர், கடந்த அக்டோபர் மாதம் தனது 100வது வயதை எட்டினார்.
இந்த நிலையில் ஜார்ஜியாவின் Plainsயில் கார்ட்டர் காலமானார். அவரது மகன் ஜேம்ஸ் இ. கார்ட்டர் III தந்தையின் மறைவை அறிவித்தார்.
100வது வயதில் ஜேம்ஸ் கார்ட்டர் காலமான நிலையில், அமெரிக்க வரலாற்றில் நீண்ட காலம் வாழ்ந்த முன்னாள் ஜனாதிபதி எனும் பெயர் பெற்றார்.
ட்ரம்ப் இரங்கல்
ஜேம்ஸ் கார்ட்டரின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் தங்களது இதயப்பூர்வமான அஞ்சலியை செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) கூறுகையில், "ஜிம்மி கார்ட்டர் காலமானார் என்ற செய்தியை நான் கேள்விப்பட்டேன். ஜனாதிபதியாக பணியாற்றும் அதிர்ஷ்டம் பெற்ற எண்களில் இது மிகவும் பிரத்யேகமான கிளப் என்பதை புரிந்துகொள்கிறோம்.
ஜனாதிபதியாக அவர் எதிர்கொண்ட சவால்கள், நம் நாட்டிற்கு ஒரு முக்கியமான நேரத்தில் வந்தன. மேலும் அவர் அனைத்து அமெரிக்கர்களின் வாழ்க்கையையும் மேம்படுத்த தனது சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் செய்தார். அதற்காக, நாம் அனைவரும் அவருக்கு நன்றிக்கடன்பட்டுள்ளோம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |