கிரீன்லாந்தை பெறப்போகும் அமெரிக்கா! பிரித்தானிய பிரதமரை சந்திக்கும் டொனால்ட் ட்ரம்ப்
தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை தொடங்கப்போகும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்தை அடையப்போவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முதல் வெளிநாட்டு பயணம்
அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) கிரீன்லாந்தை தங்கள் நாட்டுடன் இணைப்பதில் உறுதியாக இருக்கிறார்.
ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் அவரது முதல் வெளிநாட்டு பயணம் எங்கு இருக்கும் என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் சவுதி அரேபியா அல்லது பிரித்தானியாவுக்கு விரைவில் பயணிக்க உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் அவர் கிரீன்லாந்தை அடையும் கூற்றுகளை இரட்டிப்பாக்குகிறார். சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"கடைசியாக நான் சவுதி அரேபியாவுக்கு சென்றேன். ஏனென்றால் அவர்கள் 50 பில்லியன் டொலர் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களை வாங்க ஒப்புக் கொண்டனர். அதில் நிறைய இராணுவ உபகரணங்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் அடங்கும். அந்த சலுகை சரியாக இருந்தால் நான் அதை மீண்டும் செய்வேன்" என்றார்.
ஸ்டார்மர் வித்தியாசமானவர்
மேலும், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) மற்றும் அவரது அரசுடன் ஒத்துழைப்பீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப்,
"இந்த வார இறுதியில் அவர்கள் அழைப்பார்கள். நான் ஏற்கனவே அவரை 3 முறை சந்தித்திருக்கிறேன். அவர் என்னை இரண்டு முறை பார்க்க வந்துள்ளார். அவர் (ஸ்டார்மர்) தாராளவாதி, மற்றும் எனக்கு கொஞ்சம் வித்தியாசமானவர். ஆனால் அவர் நல்ல மனிதர் என்று நினைக்கிறேன். அவரது தத்துவத்துடன் நான் உடன்படாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு அவருடன் ஒரு நல்ல உறவு இருக்கிறது" என தெரிவித்தார்.
அத்துடன் கிரீன்லாந்தை கையகப்படுவதில் தனக்குள்ள ஆர்வத்தை வெளிப்படுத்திய ட்ரம்ப், குடிமக்கள் தங்களுடன் இருக்க விரும்புகிறார்கள் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |