ட்ரம்ப் பிரித்தானியாவையும் வாங்கலாம்: ஊடகவியலாளர் கிண்டல்
கிரீன்லாந்தும் தனக்குவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில், வேண்டுமென்றால் அவர் பிரித்தானியாவையும் வாங்கலாம் என்கிறார் பிரித்தானிய ஊடகவியலாளர் ஒருவர்.
ட்ரம்ப் பிரித்தானியாவையும் வாங்கலாம்
ரஷ்யா உக்ரைனை ஊடுருவுவதற்கு பதிலாக, உக்ரைனை வாங்க விரும்புவதாகக் கூறியிருந்தால், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உக்ரைனைக் கொடுத்திருப்பார் என்று கூறும் பிரித்தானிய ஊடகவியலாளரான ஜெரமி கிளார்க்சன் என்பவர், அதனால் தேவையற்ற பல விரும்பத்தகாத நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்கிறார்.
அதேபோல, அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க இருக்கும் ட்ரம்பும், அவருக்கு விருப்பமான எந்த நாட்டையும் வாங்க அனுமதிக்கப்படவேண்டும் என்று கூறும் கிளார்க்சன், பிரித்தானியாவையும் அவர் வாங்கலாம் என கேலியாக தெரிவித்துள்ளார்.
கால்பந்து அணிகளை வாங்குவதுபோல, நாடுகளையும் வாங்க அனுமதிக்கவேண்டும் என்று கூறும் கிளார்க்சன், அப்படி செய்வதால் பணத்தேவையிலிருக்கும் நாடுகளுக்கும் பெரும் தொகை கிடைக்கும் என்கிறார்.
இப்படி நாகரீகமான முறையில் நாடுகளை வாங்கினால், தேவையில்லாத போர்களையும் தவிர்க்கலாம் என்று கூறும் கிளார்க்சன், உள்ளூர் மக்களிடம் அது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தலாம் என்கிறார்.
மக்கள் சரி என்று சொல்லிவிட்டால் போதும், நாடுகள் வியாபாரம் முடிந்துவிடும் என கேலி செய்கிறார் கிளார்க்சன்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |