பிரித்தானியா திரும்பிய ஹரி, மேகன் தம்பதியர்: ட்ரம்ப் காட்டமான விமர்சனம்
Donald Trump has criticized Prince Harry and Meghan Markle after they left for the UK: இளவரசர் ஹரியும் மேகனும் மீண்டும் பிரித்தானியா திரும்பியுள்ள விடயம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வாழ்ந்துவந்த இளவரசர் ஹரி தன் குடும்பத்துடன் மீண்டும் பிரித்தானியா திரும்பியுள்ள விடயம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், அது குறித்து அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
ட்ரம்ப் காட்டமான விமர்சனம்
ஹரியும் மேகனும் பிரித்தானியா திரும்பியதில் தனக்கு மகிழ்ச்சி என்று கூறியுள்ள ட்ரம்ப், தனக்கு அவர்களைப் பிடிக்காது என்றும் கூறியுள்ளார்.

அதே நேரத்தில், நான் ராஜ குடும்பத்தில் இருந்தால், ஹரி, மேகன் தம்பதியரை மீண்டும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றும் கூறியுள்ளார் ட்ரம்ப்.
அத்துடன், தனக்கு மறைந்த எலிசபெத் மகாராணியாருடன் நல்ல நட்பு இருந்ததாகவும், மன்னர் சார்லசுடனும் தனக்கு நல்ல நட்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ள ட்ரம்ப், தன்னைப் பொருத்தவரை, அவர்கள் இருவரையுமே ஹரி, மேகன் தம்பதியர் மரியாதைக் குறைவாக நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
எலிசபெத் மகாராணியாரையும், மன்னர் சார்லசையும் மேகன் மிக மோசமாக நடத்தியதாக தான் கருதுவதாக தெரிவித்துள்ள ட்ரம்ப், மேகன் நடந்துகொண்ட விதம் தனக்குப் பிடிக்கவில்லை என்றும், தானாக இருந்திருந்தால், அவர்களை ராஜகுடும்பத்தில் மீண்டும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றும் மீண்டும் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |