சீனா விரைவில் கனடாவை முழுமையாக விழுங்கிவிடும்: டிரம்ப் எச்சரிக்கை
சீனா விரைவில் கனடாவை முழுமையாக விழுங்கிவிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
கனடா மீது டிரம்ப் பாய்ச்சல்
கடந்த வெள்ளிக்கிழமை கனடாவை கடுமையாக குற்றம்சாட்டி தன்னுடைய ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், குறிப்பாக சீனாவுடன் கனடா கொண்டுள்ள நெருக்கமான வர்த்தக உறவை தாக்கி பேசினார், இப்படியே சென்றால் முதல் ஆண்டிலேயே சீனா கனடாவை முழுமையாக விழுங்கிவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
கனடா - அமெரிக்கா இடையிலான இந்த விமர்சனத்தின் மையப்புள்ளியாக கோல்டன் டோம் எனப்படும் பாதுகாப்புத் திட்டம் அமைந்துள்ளது.
டிரம்ப் கருத்தில், கிரீன்லாந்தில் அமையவுள்ள இந்த கோல்டன் டோம் பாதுகாப்பு அமைப்பானது கனடா மற்றும் அமெரிக்காவின் ஆகிய இரண்டு நாடுகளின் பொதுவான பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
மேலும் இதனை கனடா தொடர்ந்து எதிர்த்து வருவதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் வடஅமெரிக்காவின் பாதுகாப்பை கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் சீனாவுடன் வர்த்தகம் செய்வதற்கே கனடா முன்னுரிமை வழங்கி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கனடா பிரதமர் எச்சரிக்கை
முன்னதாக, டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய கனடா பிரதமர் மார்க் கார்னி, வல்லரசு நாடுகளின் அதிகத்தில் சிக்காமல் நடுநிலை நாடுகள் சுயமாக செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் நீங்கள் முடிவெடுக்கும் மேசையில் இல்லையென்றால் மற்றவர்களுக்கு நீங்கள் உணவாக வேண்டியிருக்கும் என்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி எச்சரித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |