துஸ்பிரயோக வழக்கு... முன்னாள் ஜனாதிபதிக்கு ரூ 689 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம்

Donald Trump
By Arbin Jan 27, 2024 03:29 AM GMT
Report

அமெரிக்க பத்திரிகையாளர் மற்றும் நூல் ஆசிரியரான பெண்மணி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்புக்கு ரூ 689 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

83.3 மில்லியன் டொலர் இழப்பீடு

அமெரிக்காவில் பத்திரிகையாளரும் பல நூல்களை வெளியிட்டவருமான E. Jean Carroll என்பவருக்கே மன்ஹாட்டனில் உள்ள நீதிமன்றம் இழப்பீடு வழங்க முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்டு ட்ரம்புக்கு உத்தரவிட்டுள்ளது.

துஸ்பிரயோக வழக்கு... முன்னாள் ஜனாதிபதிக்கு ரூ 689 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம் | Trump Defemation Trial Ordered To Pay Millions @getty

மொத்தம் 10 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு தற்போது 83.3 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை மன்ஹாட்டனில் உள்ள நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வெளியிடும் முன்னர் நீதிமன்ற அவையில் இருந்து முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் புயல் வேகத்தில் வெளியேறியதாக கூறப்படுகிறது.

E. Jean Carroll என்பவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்த குற்றத்திற்காக 11 மில்லியன் டொலர் தொகையும், உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதற்காகவும் பிற பாதிப்புகளுக்காகவும் 7.3 மில்லியன் டொலர் தொகையும், தண்டனைக்கு ஒப்பான செயலுக்கு இழப்பீடாக 65 மில்லியன் டொலர் தொகையும் அளிக்க ட்ரம்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

துஸ்பிரயோக வழக்கு... முன்னாள் ஜனாதிபதிக்கு ரூ 689 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம் | Trump Defemation Trial Ordered To Pay Millions @reuters

கடந்த ஆண்டு ட்ரம்ப் மீதான வன்கொடுமை மற்றும் அவதூறு வழக்கில் கரோலுக்கு ஏற்கனவே 5 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கில் மொத்தமாக 88.3 மில்லியன் டொலர் கரோலுக்கு முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ட்ரம்ப் தம்மை வன்கொடுமை செய்ததாக

தமது புகார் மனுவில் 10 மில்லியன் டொலர் மட்டுமே கரோல் இழப்பீடாக கோரியிருந்தார். ஆனால் தற்போது 8 மடங்கு அதிகமாக நீதிமன்றம் இழப்பீடு அறிவித்துள்ளது. இதனிடையே, தீர்ப்பு தமக்கு சாதகமாக அமையாது என்பதை உணர்ந்த ட்ரம்ப், நீதிமன்றத்தில் இருந்து தடாலடியாக வெளியேறியதாக கூறப்படுகிறது.

ட்ரம்ப் வெளியேறும் முன்னர், அவரது சட்டத்தரணிக்கும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்தது. வாதிடும் நேரம் முடிவுக்கு வந்ததாக நீதிபதி பலமுறை குறிப்பிட்டும் அவர் தொடர்ந்து விளக்கமளித்துள்ளதாக கூறப்படுகிறது.

துஸ்பிரயோக வழக்கு... முன்னாள் ஜனாதிபதிக்கு ரூ 689 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம் | Trump Defemation Trial Ordered To Pay Millions @afp

இதனையடுத்து, இன்னும் வாதிடுவதை நிறுத்தவில்லை என்றால் சிறைக்கு செல்ல நேரிடும் என நீதிபதி மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 1996ல் நியூயார்க் நகர ஸ்டோர் ஒன்றில் வைத்து ட்ரம்ப் தம்மை வன்கொடுமை செய்ததாக தற்போது 80 வயதாகும் கரோல் புகார் அளித்திருந்தார்.

ஆனால் அந்த குற்றச்சாட்டுகளை மறுத்த டொனால்டு ட்ரம்ப், அவரை இழிவு செய்யும் வகையில் அறிக்கை வெளியிட்டார். விசாரணையின் தொடக்கத்தில் ட்ரம்ப் மீது தவறில்லை என்றே கருதப்பட்டது.

ஆனால் பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என்பதுடன், அவர் மனுதாரரை கடுமையாக விமர்சித்து இழிவு செய்ததும் உறுதி செய்யப்பட்டது. மொத்தம் ரூ 689 கோடி இழப்பீடு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ள தீர்ப்புக்கு எதிராக கடுமையாக விமர்சனம் முன்வைத்த ட்ரம்ப்,

உலகிலேயே பெருந்தொகை ஜீவனாம்சம் அளிக்கப்பட்ட 5 விவாகரத்துகள்... அதிக தொகை செலுத்திய பிரபலம்

உலகிலேயே பெருந்தொகை ஜீவனாம்சம் அளிக்கப்பட்ட 5 விவாகரத்துகள்... அதிக தொகை செலுத்திய பிரபலம்

இது அமெரிக்கா அல்ல, அமெரிக்காவில் நீதி கிடைக்க வாய்ப்பில்லை என கொந்தளித்துள்ளார். மட்டுமின்றி, தமது புத்தக விற்பனைக்காக கரோல் கட்டுக்கதைகளை பரப்புகிறார் என்றும் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US